- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் சினிமாவில் கானா பாடல்களுக்கு மாறியது ஏன்? என்னை அப்படி சொல்லிட்டாங்க… - வெளிப்படையாக பேசிய...

நான் சினிமாவில் கானா பாடல்களுக்கு மாறியது ஏன்? என்னை அப்படி சொல்லிட்டாங்க… – வெளிப்படையாக பேசிய தேனிசை தென்றல் தேவா!

- Advertisement -

கடந்த 1990களில் இசைஞானி இளையராஜா போலவே தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் தேனிசை தென்றல் தேவா. வைகாசி பொறந்தாச்சு படத்தில் இவரது இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களாக பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தேவா இசையமைத்தார்.

குறிப்பாக பாட்ஷா அண்ணாமலை அருணாசலம் அவ்வை சண்முகி சூரியன் இந்து ஆசை ஆனந்தப் பூங்காற்றே உன்னைத் தேடி என் ஆச ராசாவே ஏழையின் சிரிப்பில் என் ஆசை மச்சான் கட்டபொம்மன் கண்ணெதிரே தோன்றினாள் என நூற்றுக்கணக்கான படங்களில் தேவா இசை ஒலித்தது. பல நூற்றுக்கணக்கான சூப்பர் ஹிட் பாடல்களை தந்த நிலையில், அவரது படங்களில் கானா பாடல்களும் அதிகளவில் இடம்பெற்றன. கானா பாடல்களால் அவரது புகழ் மேலும் அதிகரித்தது.

- Advertisement -

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் தேவா கூறியதாவது, நான் சின்ன வயசா இருக்கும்போது ஹார்மோனியம் வாசிக்க ஆள் தேடுவாங்க. யாராவது என்னை ஹார்மோனியம் வாசிக்க கூப்பிடுவாங்களான்னு நான் ஏங்கீட்டு இருப்பேன். நான் அப்போது படிக்கிற பையனாக இருந்தேன். வீட்டுக்குள்ளே நான் இருப்பேன். நைட்டில் நான் தூங்கவே மாட்டேன்.

அப்போ என்னுடைய அப்பா வெளியில் உட்கார்ந்துட்டு இருப்பார். யாராவது என்னை கேட்டு தேடிட்டு வந்தார்கள் என்றால், அவன் தூங்கிட்டான் போங்களேண்டா என்று திட்டி அவர்களை அப்பா துரத்தி விடுவார். நான் இன்னும் தூங்கலே அப்பா என்று உள்ளே இருந்து சொல்வேன். அவ்வளவு ஆசை எனக்கு இருந்தது.

- Advertisement -

லவ் பண்றதுதான் வேற ஒன்றும் இல்லை. யாராக இருந்தாலும் முன்னுக்கு வருகிறவர்கள் எல்லாம் அவர்கள் செய்கிற தொழிலை மனசார லவ் பண்ண வேண்டும். கஷ்டம் தான் எல்லாம். இஷ்டப்பட்டு கஷ்டப்படணும். அப்படி இருந்தால் வந்துவிடலாம். அந்த ஹார்மோனியம் வாசிக்க சொல்வாங்களா என்று காத்திருந்து போய் ஆர்வமாக வாசிப்பேன்.

அப்புறம் இசையமைப்பாளராக வந்த பிறகு வெஸ்டர்ன் பண்ணினா இவரை பார்த்து காப்பியடிக்கிறேன்னு சொன்னாங்க, கொஞ்சம் போக் பாடல்கள் பண்ணினா அவரை பார்த்து காப்பியடிக்கிறேன்னு சொன்னாங்க. அதுக்கு அப்புறம்தான் எனக்குன்னு ஒரு ஸ்டைல் இருந்தா நல்லா இருக்குமே என்று யோசிச்சேன். அப்போதுதான் சின்ன வயசுல நான் கேட்டு ரசிச்ச இந்த கானா பாடல்களை பாட ஆரம்பிச்சேன். அது என் அடையாளமாக மாறியது என்று தேனிசை தென்றல் தேவா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்