தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். அடுத்த சூப்பர் ஸ்டார் இனி விஜய்தான் என்று சொல்லும் அளவுக்கு ரஜினிக்கே சவால் விடும் அளவுக்கு பெரிய நட்சத்திரமாக ரசிகர்களை கவர்ந்தவர். ஆனால் சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினி ஒருவர் மட்டும்தான், நான் எப்போதும் உங்கள் தளபதிதான் என்று அந்த சர்ச்சைக்கே நடிகர் விஜயே முற்றுப்புள்ளியும் வைத்துவிட்டார்.
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி வெளியான தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் டைம் படம் ரூ. 455 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த ஆண்டில் வெளியான தமிழ் படங்களில் அதிகமான வசூல் சாதனை புரிந்தது தி கோட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் விஜய் சம்பளம் ரூ. 200 கோடி என தகவல் வெளியானது.
இப்போது நடிகர் விஜய், தளபதி 69 என்ற தனது கடைசி படத்தில் நடித்து வருகிறார். எச் வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை பெங்களூருவை சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடித்த பிறகு, சினிமா நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு விஜய் தமிழக அரசியல் களத்தில் தீவிரம் காட்ட உள்ளார். விஜய் தனது கடைசி படத்தில் நடிக்க ரூ. 275 கோடி சம்பளம் பெற்றதாக தகவல் உள்ளது.
வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டில் முதல்வராவதே தனது லட்சியமாக அரசியல் களத்தில் பயணிக்க துவங்கியிருக்கிறார். விஜய் நடத்திய அரசியல் மாநாட்டுக்கு பிறகு திமுக விஜயின் பிரதான எதிரியாக மாறியிருக்கிறது. அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சி சீமானும் விஜயை தாறுமாறாக விமர்சித்து வருகிறார்.
சமீபத்தில் நடந்த நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் விஜய் 200 கோடி ரூபாய் சம்பளத்தை விட்டுவிட்டு அரசியல் கட்சிக்கு வந்திருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் நான் 2000 கோடி ரூபாய்க்கு கூட்டணி கட்சியில் சேர பேரம் பேசியும் அதை விட்டுவிட்டு வந்தவன் என்று ஆவேசமாக பேசியிருக்கிறார்.
சமீபத்தில் சூர்யா நடித்த கங்குவா படம் ரிலீஸாவதற்கு முன்பு பேசிய அந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா 2000 கோடி ரூபாய் வசூல் சாதனையை கங்குவா கடந்துவிடும் என்றார். பிறகு நிலமை வேறுமாதிரியாகி விட்டது. அதை விட பெரிய உருட்டாக, தனது கட்சி கூட்டணிக்கு ரூ. 2000 கோடி பேரம் பேசியதாக சீமான் கூறியிருப்பது, உருட்டுலேயே இது வேற லெவலா இருக்குதே என பலரும் கமெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர்.





