- Advertisement -
Homeபொழுதுபோக்குவெறுப்பைத் தாண்டி நெருப்பு... பருந்து சிங்கிளாகத்தான் பறக்கும்.. ரஜினி சொல்ல வந்தது இது தான்... தயாரிப்பாளர்...

வெறுப்பைத் தாண்டி நெருப்பு… பருந்து சிங்கிளாகத்தான் பறக்கும்.. ரஜினி சொல்ல வந்தது இது தான்… தயாரிப்பாளர் விளக்கம்

- Advertisement -

ரஜினிகாந்த் “ஜெயிலர்” ஆடியோ வெளியீட்டு விழாவில் கூறிய காகா-கழுகு கதை விஜய் ரசிகர்களை சீண்டிவிட்டது போல் ஆனது. விஜய்யை காகா என்று ரஜினி கூறியதாகவும் தன்னை பருந்து என்று அவர் கூறியதாகவும் பல டீகோடிங்குகளை சமூக வலைத்தளங்களில் கிளப்பிவிட்டனர். ஏற்கனவே ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே சூப்பர் ஸ்டார் சர்ச்சை போய்க்கொண்டிருக்கும் நிலையில் ரஜினிகாந்தின் இந்த பேச்சு எரிகிற நெருப்பில் டீசலை ஊற்றியது போல் ஆனது.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான போஃப்டா தனஞ்சயன், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ரஜினிகாந்த் கூறிய காகா-கழுகு கதையை தவறான நோக்கத்தோடு புரிந்துகொண்டு பரப்பிவிட்டதாக கூறியுள்ளார்.

“ரஜினி பேசியதை தவறாக புரிந்துகொண்டது போல் ஆகியுள்ளது. அவர் அந்த கண்ணோட்டத்தோடு கூறவே இல்லை. அவர் என்ன சொன்னார் என்றால், அவர் 1975-ல் சினிமாவுக்கு அறிமுகமானதிலிருந்து பலரும் தன்னை கீழே இறக்கவேண்டும் என்று தனக்கு எதிராக பல வேலைகளை செய்தனர், ஆனால் அதனை அவர் தாண்டி வந்துவிட்டதாக கூறுகிறார்.

அதாவது வெறுப்பைத் தாண்டி நெருப்பாக வந்ததாக கூறுகிறார். வெறுப்பு என்றால் என்ன அர்த்தம், பல பிரச்சனைகளை தாண்டி அவர் வந்ததாக அர்த்தம். அவ்வாறு அவர் பல பிரச்சனைகளை தாண்டி ஒரு சூப்பர் ஸ்டார் என்ற உயரத்திற்கு சென்று பருந்தாக ஆகிவிட்டதாக கூறுகிறார். அதே போல் அந்த பருந்தின் உயரத்தை தொட வேண்டும் என்று பலரும் போட்டிப்போட்டார்கள் என்பதை குறிப்பிடத்தான் காகா-கழுகு கதையை கூறினார்.

சிங்கம் சிங்கிளாகத்தான் இருக்கும் என்பது போல், பருந்து சிங்கிளாகத்தான் பறக்கும். காகா எப்போதும் கூட்டமாகத்தான் இருக்கும். பருந்து என்பது எப்போதும் தனியாக பறந்துகொண்டே இருக்கும் என்பதை குறிப்பிட்டுத்தான் அவர் அப்படி கூறினாரே தவிர, யாருடனும் தன்னை ஒப்பிட அவர் அப்படி கூறவே இல்லை” என்றும் தனஞ்சயன் அப்பேட்டியில் கூறியுள்ளார்.

சற்று முன்