தனுஷ் தற்போது குபேரா படத்தில் நடித்திருக்கிறார். அவர் நேரடியாக களம் இறங்கி இருக்கும் இரண்டாவது தெலுங்கு திரைப்படம் இது. சேகர் கமுலா இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா வருகிறார்.
இதில் பிச்சைக்காரன் கதாபாத்திரத்தில் தனுஷ் இருப்பது போன்ற போஸ்டர் ரசிகர்களை கவனிக்கச் செய்தது. பணத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. மும்பையில் இந்த திரைப்படத்தை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் சேகர் கமுலா.
அண்மையில் படத்தில் நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தனா தொடர்பான வீடியோ வெளியாகி அதன் மீதான ஆர்வத்தை தூண்டியது. அதில் நிலத்தில் புதைக்கப்பட்டிருக்கும் பண சூட்கேஸை ராஷ்மிகா மந்தனா ஆர்வமுடன் எடுத்துச் செல்வது போன்ற காட்சி இடம் பிடித்திருந்தது. தற்போது இந்த படத்தில் தனுஷின் காட்சிகள் முடிந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இளையராஜா பயோபிக் படத்தில் நடிப்பதற்கான வேலைகளில் தனுஷ் இறங்கி இருந்தார். ஆனால் திடீர் திருப்பமாக மீண்டும் இயக்கத்தில் அவர் கவனம் செலுத்த சென்று விட்டார். இந்த முறை தான் இயக்கும் திரைப்படத்திற்கு இட்லி கடை என தனுஷ் பெயர் வைத்திருக்கிறார்.
தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த திரைப்படம் படமாக்கப்பட்டு வருகிறது. திருச்சிற்றம்பலத்தில் தனுஷ் உடன் ஜோடியாக நடித்த நித்யா மேனன் இந்த திரைப்படத்திலும் அவருடன் இணைந்து நடிக்கிறார். தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்த ஷாலினி பாண்டே, இட்லி கடையில் இடம் பெற்றிருக்கிறார்.
அண்மையில் இந்த திரைப்படத்தின் சூட்டிங் தொடர்பான வீடியோ வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு வரும் நிலையில் தனுஷ் மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்குவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவரின் ஐந்தாவது திரைப்படமாக உருவாகும் இதில், பிரகாஷ்ராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். முக்கியமாக கீர்த்தி சுரேஷ் நாயகி ஆக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம் என சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.





