- Advertisement -
Homeபொழுதுபோக்குபடத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் தனுஷ்... அடுத்த பாலிவுட் படத்திற்காக இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாரா......

படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் தனுஷ்… அடுத்த பாலிவுட் படத்திற்காக இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாரா… ரசிகர்கள் ஆச்சரியம்…

- Advertisement -

நடிகர் தனுஷிற்கு கடந்த ஆண்டு கேப்டன் மில்லர் மற்றும் ராயன் என இரண்டு திரைப்படங்கள் வெளிவந்தன. இதில் ராயன், அவரது ஐம்பதாவது திரைப்படமாக வெளிவந்தது. இதனை தனுசே இயக்கி நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவரது இயக்கத்தில், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால் இது அந்த நேரத்தில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

இப்படியான சூழலில், தனுஷ் மீண்டும் தனது இயக்கத்தை கையில் எடுத்தார். இட்லி கடை என இதற்கு பெயர் வைக்கப்பட்ட நிலையில், டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்தார். தேனி மற்றும் மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்றன. இதில் தனுஷிற்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்தார்.

- Advertisement -

ராஜ்கிரன், பார்த்திபன் உள்ளிட்டோரும் படத்தில் இருக்க, அருண் விஜய் வில்லனாக நடித்திருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது. இந்தத் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படியான சூழலில் தற்போது, மீண்டும் ஒரு ஹிந்தி திரைப்படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.

இவருக்கு முதல் ஹிந்தி திரைப்படமாக ராஞ்சனா அமைந்தது. ஆனந்த் எல் ராய் இதனை இயக்கியிருந்தார். சோனம் கபூர் படத்தில் ஹீரோயின் ஆக நடிக்க, காதலை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. யாருமே எதிர்பார்க்காத வகையில், இந்த திரைப்படம் ஹிந்தியில் பெரும் வெற்றியை பெற்றது. தனுஷ் யார் என்பதும் தெரிய வந்தது.

- Advertisement -

அடுத்ததாக சமிதாப் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார் தனுஷ். அமிதாப் பச்சனும் படத்தில் இருந்ததால் இது மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த நேரத்தில் இந்த திரைப்படம் ஓடவில்லை. தொடர்ந்து அந்தராங்கி ரே படத்தில் வந்த அவர் தற்போது, tere isqk mein என்னும் பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.

இதனை மீண்டும் ஆனந்த் எல் ராய் இயக்கி வருகிறார். டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் விமானப்படை அதிகாரி கதாபாத்திரத்தில் தனுஷ் வருகிறார். அதற்காகத்தான் அவர் தனது சிகை அலங்காரத்தை மாற்றி இருக்கிறார். அவருக்கு சங்கர் எனும் கதாபாத்திரத்தை இயக்குனர் கொடுத்துள்ளார். இந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

- Advertisement -

சற்று முன்