- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரே நேரத்தில் இத்தனை படங்களில் இருந்து இரண்டாம் பாகம் எடுக்கப்படுகிறதா... அப்படினா, தமிழ் சினிமாவில் கதைக்கு...

ஒரே நேரத்தில் இத்தனை படங்களில் இருந்து இரண்டாம் பாகம் எடுக்கப்படுகிறதா… அப்படினா, தமிழ் சினிமாவில் கதைக்கு அவ்வளவு பஞ்சமா… ரசிகர்கள் கேள்வி…

- Advertisement -

நம்ம தமிழ் சினிமாவுக்கு என்னதான் ஆச்சு என்பது போல இருக்கிறது சமீபத்திய அறிவிப்புகள். ஒரு திரைப்படம் இங்கு வெளியாகி வெற்றி பெறும்போது அதில் இரண்டாம் பாகம் இருப்பது என்பது இயல்புதான் என்ற நிலை எப்போதோ வந்து விட்டது. அதேசமயம், அதற்கு உரித்தான வகையில் அந்த பாகம் இருக்கிறதா என்பது இங்கு கேள்வியாக எழுப்பப்படுகிறது.

அப்படி எண்ணுகையில் தமிழ் சினிமாவில் வெளிவந்த இரண்டாம் பாகம் தொடர்பான கதைகளில், ஒன்று இரண்டு மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. ஹரி இயக்கத்தில் சிங்கம் திரைப்படம் மாபெரும் வெற்றியடைய, அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாக இயக்குனர் அறிவித்தார். நீண்ட காலத்திற்குப் பிறகு அப்படி ஒரு விஷயத்தை மீண்டும் கையில் எடுத்தார் ஹரி.

- Advertisement -

அதேசமயம் சிங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தை வெற்றியடைவும் செய்தார் இயக்குனர் ஹரி. இதன் பிறகு ஆங்காங்கே ஒவ்வொரு திரைப்படங்களில் இருந்தும் இரண்டாம் பாகங்கள் முளைக்க ஆரம்பித்தன. ஆனால் அவை, அந்த அளவுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சொல்லப்போனால் பெரும்பாலானதாக எடுக்கப்பட்ட இரண்டாம் பாகங்கள் படுதோல்வியை சந்தித்தன. உதாரணத்திற்கு இந்தியன் படத்தில் இரண்டாம் பாகத்தைக் கூறலாம்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களின் கேலி கிண்டலுக்கு ஆளானது. இதேபோன்று, சாமி ஸ்கொயர், பில்லா 2, சண்டக்கோழி 2 உள்ளிட்ட படங்கள் கலவையான விமர்சனத்தையே பெற்றன. அதேசமயம் காஞ்சனா மற்றும் அரண்மனை திரைப்படம் தொடர்பான அடுத்தடுத்த பாகங்கள் வெற்றி பெற்றன. இப்படியான சூழலில் தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகங்களின் எழுச்சி ஆரம்பித்திருக்கிறது. இதில் மிக முக்கியமாக ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருவது நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து எடுக்கப்பட்ட இதன் முதல் பாகம் கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததால் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள். இதேபோன்று மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் முதல் பாகத்தை நயன்தாராவை வைத்து ஆர் ஜே பாலாஜி இயக்கியிருந்தார். ஆனால் இரண்டாம் பாகத்தில் இயக்குனர் மாறி இருக்கிறார். சுந்தர் சி தற்போது நயன்தாராவுடன் இந்த திரைப்படத்திற்காக பணிபுரிந்து வருகிறார்.

இதேபோன்று மீசைய முறுக்கு திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் எடுக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தை தயாரித்த சுந்தர் சியே இதனையும் தயாரிக்க, ஹிப்ஹாப் ஆதி அதில் இயக்கி நடிக்கிறார். இதேபோன்று விஷ்ணு விஷால் நடித்த கட்டா குஸ்தி திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் எடுக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவா மனசுல சக்தி திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் எடுக்கப்பட இருக்கிறது. இதனிடையே ராகவா லாரன்ஸ் தற்போது காஞ்சனா படத்தின் நான்காவது பாகத்தை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்