- Advertisement -
Homeபொழுதுபோக்குஇவர் இன்னும் திருந்தல மாமா... ட்ரெய்லர் ஆரம்பிச்சது முதல் கடைசி வரை ஒரே குண்டு சத்தம்......

இவர் இன்னும் திருந்தல மாமா… ட்ரெய்லர் ஆரம்பிச்சது முதல் கடைசி வரை ஒரே குண்டு சத்தம்… கேப்டன் மில்லரில் சக்சஸ் கேப்டன் ஆவாரா அருள் மாதேஸ்வரன்…

- Advertisement -

நடிகர் தனுஷிற்கு 2022 ஆம் ஆண்டு இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. இதில் திருச்சிற்றம்பலம் திரைப்படம், மிகப்பெரிய வசூலைப் பெற்றது. சொல்லப்போனால் முதல்முறையாக தனுஷின் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. எளிமையான கதையில், சாதாரண மனிதர்கள் பின்னணியில், காதலை கூறிய அந்த திரைப்படம், ரசிகர்களின் விருப்பத் திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது.

தனுஷின் தனது பங்கிற்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் திருச்சிற்றம்பலம் வெற்றி பெற்றது. இதன் பிறகு வெளியான, நானே வருவேன் திரைப்படம் கலவையான விமர்சனத்தால் மிகப்பெரிய வசூலை அடையவில்லை. ஆனால் இன்றைய தேதிக்கு அந்த படம் சிறப்பாகவே இருப்பதாக பலர் கூறி வருகின்றனர். இதைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வாத்தி திரைப்படம் வெளியானது.

தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுக்காமல் இந்த படம் இருந்ததால், ஓரளவு வெற்றியும் பெற்றது. இப்படியான சூழலில் தான், இயக்குனர் அருண் மாதேஸ்வரனுடன் இணைந்தார் தனுஷ். ராக்கி, சாணி காயிதம் என இரண்டு திரைப்படங்களை அவர் இதற்கு முன் எடுத்திருந்தார். இந்த இரண்டு படங்களுமே, ஆக்சன் சண்டைக் காட்சிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டது.

குறிப்பாக ரத்தம் தெறிக்க தெறிக்க பல காட்சிகள் இடம் பிடித்திருந்தது, ரசிகர்களையே முகம் சுளிக்க வைத்தது. கதை என்னதான் நன்றாக இருந்தாலும், அதற்காக இப்படியா ஆக்சன் காட்சிகள் வைப்பது என்று பலரும் கேள்விக்கு எழுப்பினர். இதன் காரணமாகவே இந்த இரண்டு திரைப்படங்களும் கலவையான விமர்சனத்தையே பெற்றன. இப்படியான சூழலில் தான் அருண் மாதேஸ்வரனின் அடுத்த பட கதையை ஓகே செய்தார் தனுஷ்.

ஆங்கிலேயர் காலத்தில் அவர்கள் நம்மை அடிமைப்படுத்தியது, சாதி தீண்டாமை உள்ளிட்டவற்றை கதை கருவாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. இதில் தனுசுடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்திப் கிஷன் உள்ளிட்டோர் நடித்தனர். சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்தது. ஜிவி பிரகாஷ் குமார் இதற்கு இசையமைத்துள்ளார். மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படம் வரும் பொங்கல் முன்னிட்டு 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இப்படியான சூழலில் தற்போது, கேப்டன் மில்லர் திரைப்படத்திலிருந்து ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. பிரியங்கா மோகனின் வசனத்துடன் ஆரம்பிக்கும் அந்த ட்ரெய்லரில், குண்டு சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. ட்ரைலர் ஆரம்பித்தது முதல் முடியும் வரை ஏதாவது ஒரு இடத்தில் வெடிகுண்டு வெடித்துக் கொண்டே இருப்பதால், அருண் மாதேஸ்வரன் தனது சேட்டையை இதிலும் காட்டிவிட்டதாகவே கருதப்படுகிறது. அது சரி படத்தை பார்த்தால் தான் என்னவென்று தெரியும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சற்று முன்