- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் தனுஷ் எடுத்த அதிரடி முடிவு, மாஜி மனைவி, மாஜி மாமனார் இதற்கு சம்மதிப்பார்களா? -...

நடிகர் தனுஷ் எடுத்த அதிரடி முடிவு, மாஜி மனைவி, மாஜி மாமனார் இதற்கு சம்மதிப்பார்களா? – விரைவில் அந்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள தனுஷ் பிஸியாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் அடுத்து குபேரா படம் வெளியாக உள்ளது. அவர் இயக்கத்தில் உருவான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் இட்லிக்கடை ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன. நடிகர், பாடகர், தயாரிப்பாளராக மட்டுமின்றி இயக்குனராகவும் தனுஷ் அசத்திக்கொண்டு இருக்கிறார்.

இந்த ஆண்டில் வெளியான மெகா ஹிட் படங்களில் தனுஷின் 50வது படம் ராயன், 100 கோடி ரூபாய் வசூலித்து, பாக்ஸ் ஆபிஸில் இடம்பிடித்தது. இந்த படத்தை டைரக்ட் செய்து நடிகர் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். வன்முறை படமாக விமர்சிக்கப்டட்டாலும் திரைக்கதையால் படத்தை ஜெயிக்க வைத்தார் தனுஷ்.

- Advertisement -

ராயன் படத்திலேயே தன்னுடைய மூத்த மகன் யாத்ராவுக்கு ஒரு கேரக்டர் தர தனுஷ் விரும்பினார். ஆனால் அது சரியாக அமையவில்லை. எனினும் தன்னுடைய மகனையும் தமிழ் சினிமாவில் நாயகனாக்கி விட வேண்டும் என்பதில் நடிகர் தனுஷ் அதிக ஆர்வமாக இருக்கிறார். வாரிசு நடிகர்கள் அதிகரித்துள்ள தமிழ் சினிமாவில் தனுஷின் வாரிசாக மட்டுமின்றி சூப்பர் ஸ்டார் குடும்ப வாரிசாகவும் யாத்ரா நடிக்க உள்ளார்.

நடிகர் தனுஷ் சமீபமாக தன் மகனுக்காக கதை கேட்க துவங்கியிருக்கிறார். தன் மகனை தமிழ் சினிமாவில் கதாநாயகனாக பார்க்கும் எண்ணம் நீண்ட நாட்களாக நடிகர் தனுஷிடம் இருந்து வருகிறது. நல்ல கதை பெரிய தயாரிப்பு நிறுவனம் நல்ல இயக்குனர் என்று தனுஷ் தேடி வருகிறார். அப்படி அமைந்தால் உடனே அதை அறிவித்து விடுவார்.

- Advertisement -

அப்படி அமையாத பட்சத்தில் தன்னுடைய டைரக்‌ஷனிலேயே மகனை நடிக்க வைக்கலாம் என்று ஒரு தீவிர முயற்சியில் தனுஷ் இருக்கிறார். ஆனால் இது எல்லாம் தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா, முன்னாள் மாமனார் ரஜினிகாந்த் ஆகியோரின் கவனத்துக்கு சென்றுள்ளதா, அவர்கள் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்களா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இப்போதைய சூழலில் தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் அதிகரித்து வருகின்றனர். விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராகி விட்டார். அதே போல் தனுஷின் மகனும் அடுத்து ஹீரோவாக நடிக்க போகிறார். ரஜினி, தனுஷ் வரிசையில் 3வது தலைமுறை நடிகராக நடிகர் தனுஷின் மூத்த மகன் யாத்ராவையும் விரைவில் திரையில் பார்க்கலாம். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்