தனுஷ் தற்போது குபேரா படத்தில் நடித்த முடித்திருக்கிறார். நாகர்ஜுனா ரஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிக்கும் இந்த திரைப்படத்தை சேகர் கமுலா இயக்கியிருக்கிறார். பணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க மும்பையில் படமாக்கப்பட்டு இருக்கிறது. இதில் பிச்சைக்காரன் கெட்டப்பில் வருகிறார் தனுஷ்.
இந்தத் திரைப்படம் வரும் ஜூன் மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை தொடர்ந்து தனுஷ், இட்லி கடை திரைப்படத்தை இயக்கி நடித்திருக்கிறார். இதில் நித்தியாமேனன் ராஜ்கிரன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். முக்கியமான கதாபாத்திரத்தில் அருண் விஜய் வருகிறார்.
அவர் படத்தில் குத்துச் சண்டை வீரராக நடிப்பதாகவும், இருப்பினும் அவருக்கு வில்லன் கதாபாத்திரம் தான் என்றும் கூறப்படுகிறது. இரண்டு விதமான காலகட்டங்களில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். தேனி மாவட்டத்தில் இதன் படப்பிடிப்பை முழுக்க முழுக்க எடுத்திருக்கிறார் தனுஷ். கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு மேலாக இதன் பணிகள் நடைபெற்று முடிந்திருக்கின்றன.
இரவு பகல் பாராமல் இட்லி கடை படத்திற்கான பணியை தனுஷ் முடித்து உள்ளார். இந்தத் திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி அஜித்குமாரின் குட் பேட் அக்லி திரைப்படத்துடன் மோதுவதாக தான் இருந்தது. ஆனால் தற்போது, போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முடிய நாளாகும் என்பதால் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியான சூழலில், அண்மையில் இட்லி கடை படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்து இருக்கிறார் தனுஷ். உடனடியாக மறுநாளே அவர் டெல்லி பயணித்து விட்டாராம். தற்போது ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் இந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இதன் சூட்டிங் ஹரியானா மற்றும் வாரணாசி பகுதிகளில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தத் திரைப்படத்தில் லைவ்விலேயே ரெக்கார்ட் செய்கிறார்களாம். அதிலும் தனுஷ் ஈடுபட்டிருக்கிறாராம். பிற மாநில நடிகர் என்ற சிறு வித்தியாசம் கூட இல்லாமல் அவர் சரளமாக இந்தி பேசுவதாக கூறுகிறார்கள். இந்த திரைப்படத்தை முடித்த கையோடு லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிக்கிறார் தனுஷ். தொடர்ந்து போர் தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜா உடனும் பணிபுரிய தனுஷ் தயாராகி வருகிறார்.





