- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷ் நடிப்பில் அப்படி ஒரு படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கப் போகிறாரா? அவரே சொன்ன...

தனுஷ் நடிப்பில் அப்படி ஒரு படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கப் போகிறாரா? அவரே சொன்ன தகவல் – இது கேட்கற போதே படம் மாஸ் காட்டுதே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்படும் ஒரு முன்னணி இயக்குனராக இருப்பவர் மாரி செல்வராஜ். ஆனால் இதுவரை அவர் இயக்கியது 4 படங்கள்தான் என்றாலும் அந்த 4 படங்களுமே பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கின்றன. இந்த படங்களுக்கு நிறைய எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் அதையும் கடந்து ஜெயித்திருக்கின்றன.

மாரி செல்வராஜ் இயக்கிய முதல் படம் பரியேறும் பெருமாள். கதிர், கயல் ஆனந்தி, மாரி செல்வராஜ், யோகிபாபு நடித்த இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. தொடர்ந்து 2வது படம் கர்ணன் இயக்கினார். இதில் நாயகனாக தனுஷ் வில்லனாக போலீஸ் எஸ்பி கேரக்டரில் நட்டி , யோகிபாபு, லால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

- Advertisement -

இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் குணச்சித்திர வேடத்தில் வடிவேலு நடித்திருந்தார். உதயநிதி, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், லால் உள்ளிட்டோர் நடித்த இந்த படமும் பெரிய வெற்றியை பெற்றது. சமீபத்தில் வெளியான அவரது 4வது படம் வாழை படத்துக்கும் ரசிகர்கள் அமோக ஆதரவு தந்திருக்கின்றனர்.

இயக்குனர் மாரி செல்வராஜ் படங்களை பொருத்த வரை, அவர் தேர்வு செய்கிற கதைக்களம், கதாபாத்திரங்கள், அதற்கான நடிகர்கள் படத்துக்கு சிறப்பாக பொருந்தி போகின்றன. சாதியம், அடிமைத்தனம், அதிகார துஷ்பிரயோகம், மனிதர்கள் மீதான சமுதாய அடக்குமுறைகள் குறித்து தனது கதாபாத்திரங்கள் வாயிலாக அவர் நியாயம் பேசுகிறார் என்ற விமர்சனங்கள் வருகின்றன.

- Advertisement -

இந்த சூழலில் மாரி செல்வராஜ், நடிகர் தனுஷ் மீண்டும் இணைய உள்ளனர். கர்ணன் படத்தை தொடர்ந்து மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. ஆனால் குபேரா, தனுஷின் 52வது படம், இளையராஜா படத்தின் 2 பாகங்கள் என ஏகப்பட்ட கமிட்மென்ட்டுகள் அவருக்கு உள்ளன.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ் கூறுகையில், சரித்திர கதையாக அந்த படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளேன். அது எனக்கு மிகவும் முக்கியமான ஒரு படமாக இருக்கும். அந்த கதையை பெரிய அளவில் எடுத்தால்தான் நன்றாக இருக்கும். அதனால் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் அந்த படம் எடுக்க கால அவகாசம் தேவைப்படும். அதற்கேற்ற சூழல் அமையும் போதுதான் அந்த படத்தை எடுக்க முடியும், என்று மாரி செல்வராஜ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்