- Advertisement -
Homeபொழுதுபோக்குமஞ்சும்மேல் பாய்ஸ் டைரக்டர் இயக்கும் படத்தில் அடுத்து நடிக்கப் போவது இந்த பிரபல நடிகரா? போடு...

மஞ்சும்மேல் பாய்ஸ் டைரக்டர் இயக்கும் படத்தில் அடுத்து நடிக்கப் போவது இந்த பிரபல நடிகரா? போடு வெடிய – ஆரம்பமே அட்டகாசமா இருக்குதே?

- Advertisement -

கடந்த 22ம் தேதி மலையாளத்தில் வெளியான படம் மஞ்சும்மேல் பாய்ஸ். இந்த படம் 5 கோடி ரூபாய் முதலீட்டில் எடுக்கப்பட்டது. இதுவரை உலகம் முழுவதும் இந்த படத்தின் வசூல் 75 கோடி ரூபாயை கடந்து விட்டதாக கூறப்படுகிறது. 12 நாட்களில் இந்த அபார வசூலுக்கு காரணம், இந்த படம் கதை, திரைக்கதையை அடித்தளமாக கொண்டு எடுக்கப்பட்டது. நடிகர்களை நம்பி அல்ல என்பதுதான்.

கேரளா எர்ணாகுளத்தில் உள்ள நண்பர்கள், 12 பேர் கொண்ட குழுவாக கோவா செல்ல முடிவு செய்கின்றனர். கடைசியில் அது கொடைக்கானல் என முடிவாகிறது. பழனி வழியாக கொடைக்கானல் செல்லும் அவர்கள் குணா குகையை பார்க்க விரும்புகின்றனர். குகைக்குள் சில ஆபத்தான பகுதிகள் இருப்பதை அறியாமல், இரும்பு தடுப்புகளை ஏறிக்குதித்து உள்ளே செல்கின்றனர்.

- Advertisement -

அப்போது அங்குள்ள ஆபத்தான இடங்களை பார்த்து ஆர்ப்பரித்து கூச்சலிடுகின்றனர். அப்போது அங்குள்ள அதலபாதாள சுரங்கத்துக்குள், டெவில் கிச்சன் என அழைக்கப்படுகிற அந்த நீளமான குழிக்குள் சுபாஷன் என்பவர் விழுந்து விடுகிறார். அவரை காப்பாற்றவே முடியாது. இதுவரை 35 பேர் அந்த சுரங்கத்துக்குள் விழுந்து இறந்துவிட்டதாக அங்குள்ள சிலர் கூறுகின்றனர். அப்படிப்பட்ட சூழலில், சுரங்கத்துக்குள் விழுந்த நண்பரை, உயிருடன் மீட்பதுதான் இந்த படத்தின் கதை.

இந்த படத்தை பொருத்த வரை பெரிய நடிகர்கள் யாரும் கிடையாது. பெரிய விளம்பரங்கள் கிடையாது. டீசர், பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள் கிடையாது. பர்ஸ்ட் சிங்கிள், செகண்ட் சிங்கிள் கிடையாது. பிரமோ கிடையாது. அப்டேட் கிடையாது. இசை வெளியீட்டு விழா கூட கிடையாது. ஆனால் படம் பார்த்த ரசிகர்கள் அனைவருமே, இந்த படத்தை பாருங்க, பாருங்க என்று ரசிகர்களை கூவி கூவி முகநூலிலும், எக்ஸ் பதிவிலும் அழைக்கின்றனர்

- Advertisement -

இந்த சூழலில், மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தை இயக்கிய இயக்குநர் சிதம்பரத்தை, நடிகர் சியான் விக்ரம் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இந்த படத்தில் குணா குகையை மையப்படுத்தி, கமல் பாட்டுக்கும் தனி இமேஜ் ஏற்படுத்தியதால், படக்குழுவினரை கமல்ஹாசனும் நேரில் அழைத்து பாராட்டியிருந்தார்.

இப்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் பலரும்,மஞ்சும்மேல் பாய்ஸ் பட இயக்குநர் சிதம்பரத்தை, தங்களது படத்தை இயக்க வருமாறு அழைத்துள்ளார். ராகுல் என்ற தயாரிப்பாளர் ஏற்கனவே ஒரு படத்துக்கு அட்வான்ஸ் கொடுத்துள்ளார். இப்போது பிரபல தயாரிப்பாளர் மதுரை அன்பு, இயக்குநர் சிதம்பரத்தை தொடர்பு கொண்டு பேசி விட்டார், இன்று மதுரை அன்பு, சிதம்பரத்துக்கு படம் இயக்க பெரிய தொகையை அட்வான்ஸாக தர இருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கப் போவது நடிகர் தனுஷ் என்பதும் முடிவாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்