மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரமை வைத்து பைசன் திரைப்படத்தை எடுத்து முடித்திருக்கிறார். இந்த டைட்டிலுக்கு கீழே காளமாடன் என்றும் வைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க கபடி விளையாட்டை மையப்படுத்தி இந்த திரைப்படத்தை எடுத்து இருக்கிறார் மாரி செல்வராஜ்.
தூத்துக்குடி மாவட்டம் மணத்தி கிராமத்தைச் சேர்ந்த கபடி வீரர் கணேசனின் வாழ்க்கையில் மையப்படுத்தி இந்த திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள். இதற்கான படபிடிப்பு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் காத்திருந்தார் துருவ்.
அந்த சமயத்தில் அவர் கபடி விளையாட்டு தொடர்பான பயிற்சியில் முழுக்க முழுக்க ஈடுபட்டிருந்தார். இந்த இடைவேளையில், மாமன்னன் மற்றும் வாழை ஆகிய திரைப்படங்களை எடுத்து முடித்தார் மாரி செல்வராஜ். இரண்டுமே பெரும் வெற்றி பெற்று வசூல் ரீதியாக சாதனை படைத்தது.
தற்போது பைசன் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஆறு மாதங்களில் முடிக்கப்பட்டுள்ளது. முழு வீச்சில் இதற்கான பணிகளை முடித்திருக்கிறார் மாரி செல்வராஜ். இதில் கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரன் மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இது போக லால், அழகம்பெருமாள், கலையரசன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
அனேகமாக ஆகஸ்ட் மாதம் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது அடுத்த திரைப்படத்திற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார் மாரி செல்வராஜ். இதற்கான அறிவிப்பை அவர் அண்மையில் வெளியிட்டார். கர்ணன் திரைப்படம் வெளியாகி நான்காவது ஆண்டை நிறைவு செய்து உள்ள நிலையில் அந்த தினத்தில் தான் இதற்கான அறிவிப்பு வெளியானது.
அதில் தனுசுடன் இணைந்து மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார் மாரி செல்வராஜ். இது தனுஷின் 56வது திரைப்படமாக எடுக்கப்படுகிறது. ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இது முழுக்க முழுக்க வரலாற்று பின்னணியை வைத்து எடுக்கப்பட இருப்பதாக தகவல் கசிந்து உள்ளது. பட்ஜெட் மட்டும் 120 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று கூறுகிறார்கள்





