- Advertisement -
Homeபொழுதுபோக்குதி கோட் படத்தில் அப்படி ஒரு விஷயத்தை செய்திருக்கிறாரா யுவன் சங்கர் ராஜா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்…...

தி கோட் படத்தில் அப்படி ஒரு விஷயத்தை செய்திருக்கிறாரா யுவன் சங்கர் ராஜா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்… ஆனா இசைஞானிகிட்ட பர்மிஷன் வாங்கிட்டீங்களா பாஸ்?

- Advertisement -

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 47 ஆண்டுகளுக்கு மேலாக இசை சக்கரவர்த்தியாக கோலோச்சி வருபவர் இசைஞானி இளையராஜா. இதுவரை 1200 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜா ஒரு மேஸ்ட்ரோ என புகழப்படுபவர். இவரது 2 மகன்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜாவும் இசைத்துறையில் முன்னணியில் இருந்து வருகிறார்.

இசைஞானி இளையராஜா வாழ்க்கை வரலாறு படம் விரைவில் உருவாகிறது. இரண்டு பாகங்களை இந்த படத்தை இயக்க இருப்பவர் கேப்டன் மில்லர் டைரக்டர் அருண் மாதேஸ்வரன். இந்த படத்தில் இளையராஜா கேரக்டரில் நடிக்க இருப்பவர் நடிகர் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டில் ஷூட்டிங் துவங்க இருக்கிறது.

சமீபகாலமாக இளையராஜா ஏற்படுத்தி வரும் மிகப்பெரிய பிரச்னை, அவரது பாடல்களை அவரிடம் அனுமதி பெறாமல் யாரும் பயன்படுத்த கூடாது. குறிப்பாக அவரது இசையை, பாடல்களை யாரேனும் தங்களது படங்களில் தனது அனுமதியின்றி பயன்படுத்தினால் உடனடியாக நோட்டீஸ் அனுப்பி விடுவார். ரஜினி நடித்த கூலி பட டிரெய்லருக்கும் நோட்டீஸ் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார்.

விஜய் நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் வருகிற 5ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தில் இருந்து இதுவரை 4 பாடல்கள் வெளிவந்த நிலையில், ஒரு பாடல் கூட ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை. அதுவும் நேற்று மாலை வெளியான மட்ட பாடலும் ரசிகர்களுக்கு போதிய திருப்தி அளிக்கவில்லை.

இந்நிலையில் தனது இசையில் உருவான சில படங்ளகில் அப்பா இளையராஜாவின் சில சூப்பர் ஹிட் பாடல்களை ரீமிக்ஸ் செய்து தந்துள்ளார். ஆசை நூறு வகை, காதல் வந்திருச்சு, வச்சிக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள, பேரு வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம், ரம்பம் பம் ஆரம்பம் உள்ளிட்ட பாடல்களை அவர் ஏற்கனவே ரீமிக்ஸ் செய்துள்ளார்.

இப்போது வருகிற 5ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள தி கோட் படத்திலும், இளையராஜா இசையில் வெளிவந்த சூப்பர் ஹிட் பாடல் ஒன்றை ரீமிக்ஸ் செய்து 5வது பாடலாக படத்தில் யுவன் சங்கர் ராஜா சேர்த்திருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது. அந்த பாடல் என்னவென்று படம் வந்த பிறகுதான் தெரியுமா, அல்லது முன்பே தெரிவித்து விடுவார்களா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

சற்று முன்