- Advertisement -
Homeபொழுதுபோக்குஉறவினரை கதாநாயகனாக வைத்து அடுத்த படத்தை இயக்கும் தனுஷ்... பட பூஜையும் போட்டாச்சாம்... சரி யார்...

உறவினரை கதாநாயகனாக வைத்து அடுத்த படத்தை இயக்கும் தனுஷ்… பட பூஜையும் போட்டாச்சாம்… சரி யார் அந்த சொந்தக்காரர் தெரியுமா…

- Advertisement -

தனது நடிப்புத் திறமையால் பாராட்டப்பட்டு, தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் தனுஷ். நடிப்பு மட்டுமல்லாமல் தயாரிப்பு, பாடலாசிரியர், இயக்கம் என அவருக்கு பல முகங்கள் உண்டு. தற்போது நடிப்பில் பிசியாக இருக்கும் அவர், கேப்டன் மில்லர் படத்தின் பணிகளை முடித்திருக்கிறார்.

அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்த திரைப்படம், பொங்கலன்று வெளியாகிறது. இதில் தனுஷ் உடன் சேர்ந்து சந்தீப் கிஷன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

- Advertisement -

இந்த திரைப்படத்திற்குப் பிறகு தனது ஐம்பதாவது படத்தை தனுஷே இயக்கி நடித்து வருகிறார். ஜூலை மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு பணிகள், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, சந்திப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். வடசென்னையை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு எடுக்கப்பட்டது. பிறகு அவுட்டோர் காட்சிகளுக்காக காரைக்குடிக்கு சென்ற தனுஷ் அங்கு சில காட்சிகளை படம்பிடித்தார். இந்த படத்திற்காக மொட்டை கெட்டப்பில் தனுஷ் வருகிறார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். இந்த நிலையில், புதிய படம் ஒன்றையும் இயக்குவதற்கு தனுஷ் திட்டமிட்டு உள்ளாராம். அவர் இயக்கத்தில் முதன்முறையாக வெளிவந்த பவர் பாண்டி திரைப்படம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்தது. காதலையும், அதன் தோல்வியையும் அருமையாக காட்சிப்படுத்தி இருந்த தனுஷை பலரும் பாராட்டினர்.

இப்படியான சூழலில் தனது அடுத்த படத்தில் நாயகனாக தனது மருமகனை தனுஷ் அறிமுகப்படுத்த இருக்கிறாராம். அது மட்டுமல்லாமல் முக்கிய கதாபாத்திரம் ஒன்றிலும் தனுஷ் நடிக்கிறாராம். இதற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இதன் பட பூஜை சன் டிவி அலுவலகத்தில் நடைபெற்று உள்ளது. சூட்டிங் பணிகள் அடுத்த வாரமே சென்னையில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

சற்று முன்