- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் தெலுங்கு இயக்குனருடன் கைகோர்த்த தனுஷ்... இந்த முறை விஜயகாந்த் பட டைட்டிலை கையில் எடுத்திருக்கிறாராம்......

மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் கைகோர்த்த தனுஷ்… இந்த முறை விஜயகாந்த் பட டைட்டிலை கையில் எடுத்திருக்கிறாராம்… எல்லாம் இயக்குனருக்கு முந்துன திரைப்படம் கொடுத்த ‘லக்’ தான் காரணமா…

- Advertisement -

நடிகர் தனுஷ் தற்போது இட்லி கடை திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதில் தனுஷிற்கு ஜோடியாக நித்யா மேனன் வருகிறார். ராஜ்கிரணுக்கு படத்தில் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியாகியிருந்தது. அதனைப் பார்க்கும்போது படம், பீரியட் திரைப்படமாக எடுப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஒரு ஹோட்டலை மையப்படுத்தி தான் இதன் கதை நகரும் என்று கூறுகிறார்கள். ஜிவி பிரகாஷ் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்தத் திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே தேதியில் அஜித்குமார் நடித்த குட் பேட் அக்லி படம் ரிலீஸ் ஆகிறது.

இதனால் ரிலீஸ் தேதியில் இருந்து இட்லி கடை திரைப்படம் பின்வாங்க வாய்ப்பு இருப்பதாக பலர் கூறுகிறார்கள். அதேசமயம் இட்லி கடை திரைப்படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகும் என்று தனுஷ் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க தனது அடுத்தடுத்த திரைப்படங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ்.

அவருக்கான பட பட்டியலும் நீண்டு கொண்டே செல்கிறது. அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி அதிரி புதிரி வெற்றியைப் பெற்ற அமரன் திரைப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, தனுஷ் கைகோர்த்து இருப்பது நம் அனைவருக்கும் தெரியும். கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது.

ஆனால் இந்த திரைப்படம் எப்போது உருவாகும் என்பது பற்றி இன்னும் கூறப்படவில்லை. இதுபோக மாரி செல்வராஜுடனும் தனுஷ் கை கோர்த்து இருக்கிறார். இந்த ப்ராஜெக்ட்டும் ரெடியாக இருக்கும் சூழலில் படப்பிடிப்புக்கான தகவல் வெளியாகவில்லை. தனுஷ் இட்லி கடையை முடித்துவிட்டு இளையராஜா பயோபிக் திரைப்படத்தில் நடிப்பதாகத்தான் இருந்தது.

ஆனால் அந்தத் திட்டம் தற்போது இல்லை என சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். இந்த சமயத்தில் தான் வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லுரியுடன் மீண்டும் கைகோர்த்து இருக்கிறார் தனுஷ். இவர்கள் கூட்டணியில் உருவான வாத்தி திரைப்படம் பெரியளவு வெற்றி பெறவில்லை. ஆனால் இதற்கு அடுத்ததாக துல்கர் சல்மானை வைத்து வெங்கிஇயக்கிய லக்கி பாஸ்கர் திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது. விமர்சன ரீதியாகவும் இது வரவேற்பை பெற்றது. இதன் காரணமாகத்தான் சம்பந்தப்பட்ட இயக்குனரிடம் தனது அடுத்த திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் தனுஷ். இந்த திரைப்படத்திற்கு ஹானஸ்ட் ராஜ் என பெயர் வைத்திருக்கிறார்கள். விஜயகாந்த் நடிப்பில் இதே டைட்டிலில் படம் வெளியாகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்