- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த ஒரு விஷயம்தான் மஞ்சும்மெல்ஸ் பாய்ஸ் படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய விடவில்லை...

அந்த ஒரு விஷயம்தான் மஞ்சும்மெல்ஸ் பாய்ஸ் படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய விடவில்லை – டைரக்டர் சொல்றது புது விஷயமா இருக்குதே?

- Advertisement -

தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதுமே நல்ல படங்களை வரவேற்கவும், ஆதரவு தரவும் தவற மாட்டார்கள். அது பிறமொழி படங்களாக இருந்தாலும் படத்தின் கதை அம்சம், திரைக்களம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று விடும். அப்படி பல படங்கள் தமிழில் வந்து ஜெயித்திருக்கின்றன.

அந்த வகையில் பாகுபலி, புஷ்பா, மஞ்சம்மெல் பாய்ஸ், பிரேமலு, ஆடுஜீவிதம், காந்தாரா உள்ளிட்ட பல படங்களை சொல்ல முடியும். படம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் அந்த படத்துக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிய அளவில் வெற்றியைக் கொடுப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

- Advertisement -

கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான படம் மஞ்சும்மெல் பாய்ஸ். இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில் பத்துக்கும் மேற்பட்ட புதுமுக நடிகர்கள்தான் நடித்திருந்தனர். ஆனால் இந்த படம் வெளியாகி கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் மொத்தமாக 230 கோடி ரூபாய் வசூலித்து, மலையாள சினிமாவில் மிக அதிகமான வசூலை பெற்ற படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் 10 இளைஞர்களில் ஒருவர் அங்குள்ள சாத்தான் சமையலறை எனப்படும் குணா குகையில் தவறி விழுந்து விடுகிறார். அவரைக் காப்பாற்ற மற்ற நண்பர்கள் படுகிற சிரமங்களும், அவர்கள் சந்திக்கிற போராட்டங்களும் தான் படத்தின் மையக்கதை. இதை உணர்வு பூர்வமாக அந்த படத்தில் சொல்லி இருந்ததால் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

- Advertisement -

அதேசமயத்தில் மலையாளத்தில் வெளியான இந்த படத்தை தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்ய படம் வெளியான கொஞ்ச நாட்களிலேயே பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால் எந்த மொழியிலும் ரீ மேக் செய்யப்படுவதற்கு இந்த படம் கொடுக்கப்படவில்லை. ஆனால் மலையாளத்தில் வெளியான இந்த படத்தில், தமிழ் வசனங்களும் அதிகளவில் இடம்பெற்றிருந்தன.

சமீபத்தில் மஞ்சும்மெல் பாய்ஸ் இயக்குனர் சிதம்பரம் ஒரு நேர்காணலில் கூறியதாவது, இந்த படத்தின் கதை யுனிவர்சல் சப்ஜெக்ட் தான் என்றாலும் இது கேரளா மற்றும் தமிழகம் என்ற இரண்டு மாநிலங்களில் உள்ள மக்களின், அவர்களது வாழ்க்கை கலாச்சாரங்களை இணைக்கும் படமாக ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. இந்த கதையை வேறு மொழியில் படமாக்கினால் நிச்சயமாக இந்த உணர்வுகளை ரசிகர்களுக்கு கடத்த முடியுமா என்பது சந்தேகம்தான். அப்படியே ரீமேக் செய்தாலும் இங்கே பெற்ற இந்த பெரிய வெற்றியை, அங்கே பெறுவதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. அதனால்தான் இந்த படத்தை ரீமேக் செய்ய விரும்பவில்லை என்று சிதம்பரம் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்