- Advertisement -
Homeபொழுதுபோக்குகடும் அதிருப்தியில் உள்ள தனுஷ் ரசிகர்கள், மாஸ் ஹீரோவுக்கு இப்படி ஒரு நிலமையா? - இதற்கு...

கடும் அதிருப்தியில் உள்ள தனுஷ் ரசிகர்கள், மாஸ் ஹீரோவுக்கு இப்படி ஒரு நிலமையா? – இதற்கு பிள்ளையார் சுழி போட்டதே அந்த நடிகர்தான்

- Advertisement -

நடிகர் தனுஷ், இப்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை டைரக்ட் செய்கிறார். அது மட்டுமின்றி தனது 50வது படம் ராயன் என்ற படத்தையும் டைரக்ட் செய்கிறார். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் ஷூட்டிங் ஏறக்குறைய முடிந்து விட்டது. ராயன் படம் ஷூட்டிங் இடையே, மற்றொரு படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார்.

தெலுங்கு பட இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் குபேரா என்ற படத்தில், தனுஷ் நடிக்கிறார். ஐதராபாத், கோவா உள்ளிட்ட பகுதிகளில் குபேரா படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். போலீஸ் அதிகாரியாக வில்லன் வேடத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா நடிக்கிறார். இந்த படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

- Advertisement -

நடிகர் தனுஷ், இயக்குநர் கஸ்தூரிராஜாவின் மகன், இயக்குநர் செல்வராகவனின் தம்பி. அத்துடன் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மருமகன், மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் ஒரு டைரக்டர் என பெருமைகளை கொண்டவர். ஏற்கனவே ப. பாண்டி என்ற படத்தை தயாரித்து, இயக்கி வெற்றிப் பெற்ற தனுஷ், இப்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும், ராயன் என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இதில் ராயன் தனுஷின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர், டைரக்டர், தயாரிப்பாளர், பாடகர், பிரபலமான சினிமா பின்னணி கொண்டவர் என்ற பல பெருமைகளை கொண்ட நடிகர் தனுஷ், இப்போது தெலுங்கு பட இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் குபேரா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் தனுஷ், பிச்சைக்காரராக இருந்து, பின் பெரிய அரசியல் தலைவராக மாறுவதுதான் கதையின் மையக்கரு.

- Advertisement -

இப்படி பிச்சைக்காரர் நிலையில் இருந்து, பெரிய அரசியல் தலைவராக தனுஷ் மாறுவதால்தான் படத்துக்கே குபேரா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் நாகர்ஜூனா, போலீஸ் அதிகாரியாக வந்து வில்லத்தனங்கள் செய்து தனுஷை அவரது வளர்ச்சியை தடுக்க முயற்சிப்பதே படத்தின் விறுவிறுப்பான காட்சிகளாக படமாக்கப்பட்டு வருகின்றன.

அடிமட்ட நிலையில் இருக்கும் ஒருவன், பெரிய நிலைக்கு வருவது போல இந்த படத்தில் காட்ட, பல பெருமைகள் கொண்ட தனுஷை பிச்சைக்காரர் கேரக்டரில் நடிக்க செய்திருப்பது, தனுஷ் ரசிகர்களை கடுமையாக அதிப்தியடைய செய்துள்ளது. மாஸ் ஹீரோவான தனுஷை இப்படி ஒரு நிலமையில், கேரக்டராக காட்டலாமா என, விரக்தியில் இருக்கின்றனர். ஆனால் முதன்முறையாக பிச்சைக்காரன் படத்தில், அந்த கேரக்டரில் நடித்த நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிதான் இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்