- Advertisement -
Homeபொழுதுபோக்குபோர் தொழில் இயக்குனருடன் தனுஷ் கைகோர்த்திருக்கும் திரைப்படம் இந்த ஜானரில் எடுக்கப்படுகிறதா... நடிகரின் ரசிகர்களுக்கு ஒரு...

போர் தொழில் இயக்குனருடன் தனுஷ் கைகோர்த்திருக்கும் திரைப்படம் இந்த ஜானரில் எடுக்கப்படுகிறதா… நடிகரின் ரசிகர்களுக்கு ஒரு சின்ன அப்டேட்…

- Advertisement -

ராயன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் குபேரா வெளியானது. நேரடி தெலுங்கு திரைப்படமாக எடுக்கப்பட்ட இது தமிழிலும் வெளியிடப்பட்டது. சேகர் கமுலா இதனை இயக்கியிருந்த நிலையில், நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆனால் இந்த திரைப்படம் தெலுங்கு மொழியில் மட்டுமே வெற்றி பெற்றது.

தமிழ் சினிமாவுக்கு ஏற்ற வகையில் இந்த திரைப்படம் எடுக்கப்படவில்லை என்றும், இதனால் படம் வந்த இடம் தெரியாமல் மறைந்து போனது எனவும் பலர் கூறினர். இதனிடையே குபேரா திரைப்படத்திற்கு பிறகு பாலிவுட் திரைப்படத்தில் நடித்து வந்தார் தனுஷ். அதன் படப்பிடிப்பும் தற்போது முடிந்து இருக்கிறது. ஆனந்த் எல் ராய் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

- Advertisement -

இதில் தனுஷிற்கு விமானப்படை அதிகாரி கதாபாத்திரம் என்றும், படத்தில் அவரது பெயர் சங்கர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனேகமாக இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் இந்தத் திரைப்படம் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இதனிடையே தனது அடுத்த அடுத்த திரைப்படங்களில் பிஸியாகி இருக்கிறார் நடிகர் தனுஷ்.

அவர் அடுத்தடுத்த படங்களுக்காக ஒப்புக்கொண்ட இயக்குனர்களின் பட்டியல் விரிவடைந்து வருகிறது. இதில் வேல்ஸ் ஃபிலிம் நிறுவனம் தயாரிக்க மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் தனுஷ். பிரம்மாண்டமான முறையில் இந்த திரைப்படம் எடுக்கப்பட இருக்கிறது. இதுபோக அமரன் திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமியும் தனுசுடன் கைகோர்க்க இருக்கிறார்.

- Advertisement -

லப்பர் பந்து என மிகப் பெரிய வெற்றி திரைப்படத்தை கொடுத்த தமிழரசன் பச்சை முத்துவும் தனுஷின் கால் ஷீட்டுக்காக காத்திருக்கிறார். இதன் நடுவே தனுஷ் இயக்கி நடித்திருக்கும் இட்லி கடை திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. வரும் அக்டோபர் 1ஆம் தேதி அந்த திரைப்படம் வெளியாகும் நிலையில் அதிலிருந்து ஒரு பாடல் அண்மையில் ரிலீஸ் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது, போர் தொழில் திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தை ஈர்த்த விக்னேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இதில் அவருக்கு ஜோடியாக மமீதா பைஜூ வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படியான சூழலில் படத்திலிருந்து ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் ஒரு செல்போன் பூத்தில் இருந்து தனுஷ் பேசுவது போன்ற புகைப்படம் இருக்கிறது. காலண்டரிலும் 2011 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த திரைப்படம் பீரியாடிக் ஜானரில் எடுக்கப்பட்டு வருவதாக பலரும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்