- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் ரஜினிகாந்துடன் மோத மறுத்த பிரபல நடிகர், கடைசி நேரத்தில் பிளானை மாற்றியது ஏன்? -...

நடிகர் ரஜினிகாந்துடன் மோத மறுத்த பிரபல நடிகர், கடைசி நேரத்தில் பிளானை மாற்றியது ஏன்? – குருவை மதிக்கும் சிஷ்யன் என பாராட்டும் ரசிகர்கள்!

- Advertisement -

இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன் நடிகர் தனுஷ். கடந்த 2004ம் ஆண்டில் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். யாத்ரா லிங்கா என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டில் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அறிவித்தனர்.

அதன்பிறகு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்து சட்டப்படி விவாகரத்து ஆன நிலையில் இருவரும் பிரிந்து விட்டனர். தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று ரஜினி தரப்பிலும் கஸ்தூரி ராஜா தரப்பிலும் குடும்பத்தினர் பலகட்ட முயற்சி எடுத்தும் அது நடக்கவில்லை.

- Advertisement -

நடிகர் தனுஷின் முன்னாள் மாமனார் நடிகர் ரஜினிகாந்த் என்றான நிலையிலும் இன்னும் ரஜினி மீது அளவு கடந்த அன்பும் மரியாதையும் வைத்திருப்பவர்தான் தனுஷ். ரஜினி நடித்த படம் ரிலீஸாகும் நேரங்களில், அவரது படங்கள் குறித்த அப்டேட் வெளியாகும் நேரங்களில் தலைவா என்று குறிப்பிட்டு தனுஷ் தனது வலைதள பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவிப்பது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில் தனது குருவான ரஜினிகாந் நடித்த ஜெயிலர் 2 படம் வெளியாக உள்ளதால் தனது ஓம் படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் தள்ளி வைத்ததாக ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த படம் ஓம்.

- Advertisement -

இந்த படத்தை வருகிற அக்டோபர் 16ம் தேதி ஆயுத பூஜை பண்டிகைக்கு ரிலீஸ் செய்யலாம் என்று படக்குழு தரப்பில் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அதே நாளில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படத்தை ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்த தகவல் நடிகர் தனுஷூக்கு தெரிய வந்தது.

இந்த நிலையில் ஓம் படத்தை ரஜினிக்கு போட்டியாக அந்த நாளில் ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று நடிகர் தனுஷ் ஓம் பட தயாரிப்பாளரிடம் கூறியிருக்கிறார். அதனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற நவம்பர் 6ம் தேதி ஓம் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினி படம் ரிலீஸ் காரணமாக தன் படத்தின் ரிலீஸ் தேதியை தனுஷ் மாற்றி வைத்திருப்பதால் குருவை மதிக்கும் நல்ல சிஷ்யன் என்று ரஜினி ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்