- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயக கடமையாற்றாமல் டிமிக்கி கொடுத்த நடிகர் சிம்பு... அதற்கு இதுதான் காரணமா?...

ஜனநாயக கடமையாற்றாமல் டிமிக்கி கொடுத்த நடிகர் சிம்பு… அதற்கு இதுதான் காரணமா?…

- Advertisement -

மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு, தமிழ்நாடு புதுச்சேரி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 102 தொகுதிகளில் நேற்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி வாக்கு பதிவு, மாலை ஆறு மணிக்கு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

 

- Advertisement -

ஆனால் கடந்த முறையைக் காட்டிலும் இந்த முறை தமிழ்நாட்டில் குறைந்த அளவே வாக்குகள் பதிவாகியுள்ளன. ஒட்டுமொத்தமாக 69.46 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருப்பது கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டத்திலும் குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

 

- Advertisement -

இந்த நிலையில் தேர்தல் நாளன்று, அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் ஆர்வமுடன் வாக்குகளை வந்து பதிவு செய்தனர். மேலும் வாக்களித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்து அவர்கள், அனைவரும் நிச்சயம் ஓட்டு போட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இவர்களுக்கு எல்லாம் முன் உதாரணமாக அஜித் செயல்பட்டார்.

 

காலை 7 மணிக்கு வாக்கு தொடங்கிய நிலையில், ஆறு முப்பது மணிக்கு திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடிக்கு அஜித் சென்றார். அரை மணி நேரம் காத்திருந்து, அவர் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். இதே போல் நடிகர் விஜய்யும், சென்னையில் தனது வாக்கை பதிவு செய்தார். அவர் கோட் திரைப்படத்திற்காக ரஷ்யாவில் இருந்தார். இங்கிருந்து விமானம் மூலம், சென்னை வந்த அவர் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.

 

அப்போது அவர் கையில் காயம் இருந்தது தெரியவந்தது. படப்பிடிப்பின் போது இந்த காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதே போல் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோரும் தங்கள் ஜனநாயக கடமையாற்றினர். சூர்யா, கார்த்தி, தனுஷ், ஜெயம் ரவி, வடிவேலு, யோகி பாபு, இயக்குனர்கள் வெற்றிமாறன், பா ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலரும் தங்கள் ஜனநாயக கடமையாற்றினர்.

 

ஆனால் கடைசி வரை நடிகர் சிம்பு வாக்களிக்க வரவில்லை. அவரது தந்தை டி ராஜேந்தர் மட்டும் தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு செலுத்தினார். சிம்பு வராதது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வந்த சூழலில் அது குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. அவர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக் லைப் திரைப்படத்தின் சமீபத்தில் கமிட்டானார். இதில் சிம்புவுக்கு வில்லன் கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. அதற்கான படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலம் ஜெய் சல்மார் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு இருப்பதால் அவர் வாக்கு செலுத்த வரவில்லை என்று கூறப்படுகிறது.

 

- Advertisement -

சற்று முன்