- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண வீடியோவுக்கு நெட்பிளிக்ஸ் கொடுத்த விலை எவ்வளவு தெரியுமா? -...

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண வீடியோவுக்கு நெட்பிளிக்ஸ் கொடுத்த விலை எவ்வளவு தெரியுமா? – போட்றா வெடிய… 2 வியாபாரிகளின் சண்டையா இது?

- Advertisement -

நடிகை நயன்தாரா, நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது அந்த படத்தை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல் வயப்பட்டார். ஏற்கனவே சிம்பு, பிரபுதேவா ஆகியோருடன் நெருங்கிய நட்பு காட்டிய நயன்தாரா, அவர்களுடன் பிரேக்கப் செய்த நிலையில், விக்னேஷ் சிவனுடன் காதல் மலர்ந்தது.

நடிகர் தனுஷ் தயாரிப்பில், விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க நானும் ரவுடிதான் படத்தில் காது கேளாத பெண் கேரக்டரில் நயன்தாரா நடித்திருந்தார், இந்த படத்தின் ஷூட்டிங் நடந்த போது விக்னேஷ் சிவனுக்கும், ;நயன்தாராவும் நெருக்கமான காதல் ஏற்பட்டு, இருவரும் படப்பிடிப்பில் போதிய கவனம் செலுத்தாமல் விட்டனர்.

- Advertisement -

இதனால் ரூ. 10 கோடி வரை தயாரிப்பாளர் தனுஷூக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இந்த படத்தையே பிரேக் செய்துவிடலாம் என நடிகர் தனுஷ் முடிவு செய்துவிட்டார். அப்போது நயன்தாரா சில கோடிகளை செலவு செய்து இந்த படத்தை முடித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் தனுஷ், நயன்தாராவுக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு, வெறுப்பு, கோபம்தான் பிறகு அவர்களது நீண்டநாள் பகைக்கு காரணமாக அமைந்தது. அதன்பிறகு 7 ஆண்டுகள் கழித்து விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடந்தது.

- Advertisement -

அப்போது தனது திருமணத்தை இயக்குனர் கௌதம் மேனன் மூலம் ஒரு திரைப்படம் போல உருவாக்க நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஏற்பாடு செய்தனர். இந்த வீடியோவை பெரிய விலை கொடுத்து வாங்க நெட்பிளிக்ஸ் நிறுவனமும் முன்வந்தது. சினிமா நட்சத்திரங்கள் பல கோடி ரூபாய் செலவு செய்து திருமணம் செய்வார்கள். ஆனால் திருமணம் செய்து பல கோடி சம்பாதிக்க தெளிவாக திட்டமிட்டது விக்கி, நயன் ஜோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா திருமண வீடியோவுடன் அவரது குழந்தை பருவம், இளமை பருவம், சினிமா பயணம், காதல் வாழ்க்கை, திருமணம் என பல விஷயங்களை உள்ளடக்கிய இந்த வீடியோவை, ரூ. 80 கோடி விலை கொடுத்து நெட்பிளிக்ஸ் வாங்கியிருக்கிறது. அதில் தனது படத்தின் காட்சிகளை பயன்படுத்திக்கொள்ள தயாரிப்பாளர் தனுஷ் ரூ. 10 கோடி கேட்டிருக்கிறார். ஆக இது 2 வியாபாரிகளுக்குள் நடக்கும் வரவு செலவு சண்டைதான் இது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்