நடிகர் தனுஷ் இப்போது, சேகர் கம்முலு என்ற தெலுங்கு மொழி டைரக்டர் படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா இதில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் இந்த படம் தயாராகி வருகிறது.
இதற்கிடையே நடிகர் தனது 50வது படத்தை அவரே டைரக்ட் செய்கிறார். டி50 என துவக்கத்தில் பெயரிடப்பட்ட படத்துக்கு பிறகு ராயன் என டைட்டில் வைத்துள்ளார். இந்த படத்தில் நடிக்கும் கேரக்டர்களை அவரே தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அதுவும் கருப்பு, வெள்ளை புகைப்படங்களாக அந்த நடிகர்களை தனுஷ் அறிமுகப்படுத்தும் விதமே ரசிகர்கள் மத்தியில் மாஸ் கிளப்பியுள்ளது.
அந்த வகையில் இதுவரை ராயன் படத்தில் தனுஷ் உடன் நடிக்கும் கேரக்டர்களாக எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ், செல்வராகவன், துஷாரா விஜயன், பிரகாஷ் ராஜ், அபர்ணா முரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோரது படங்களை வெளியிட்டு இருந்தார். அந்த வகையில் தற்போது நடிகர் சரவணன் படத்தையும் தனுஷ் வெளியிட்டுள்ளார்.
இப்படி முக்கிய நடிகர்களை ராயன் படத்தில் அவர் களத்தில் இறக்கி வருவது, தனுஷ் ரசிகர்களையே மிகப்பெரிய சந்தோஷத்தை, உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும் சென்டிமென்டையும், ஆக்ஷன் களத்தையும் ஒன்றாக கொண்டு வந்துள்ள இந்த படத்தில், தனுஷ் ஒவ்வொரு கேரக்டருக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து கதையை எழுதியுள்ளார். அதனால் படத்தில் ஒவ்வொரு நடிகருக்கும் தனித்துவமான நடிப்பும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது இயக்குநர் வெற்றிமாறன் ஸ்டைல். அவரது இயக்கத்தில் வரும் படங்களில் மட்டுமே படத்தில் நடிக்கும் ஒவ்வொரு கேரக்டருக்குமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். வெற்றிமாறன் படங்களில் அதிகமாக நடித்த தமிழ் பட ஹீரோ தனுஷ்தான். எனவே, வெற்றிமாறனை பின்பற்றி ராயன் படத்தை தனுஷ் உருவாக்கி வருவதாகவும் ஒரு பேச்சு பரவி வருகிறது.
இப்போது ராயன் படம் டைரக்ஷன், சேகர் கம்முலா இயக்கத்தில் நடிப்பு ஆகியவற்றுடன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் 70 சதவீத டைரக்ஷனை முடித்துள்ளார் தனுஷ். இரண்டு படங்களில் டைரக்ஷன், ஒரு படத்தில் நடிப்பு என ஏகப்பட்ட பிஸியிலும், ராயன் படத்துக்கான பிரமோசன், நடிகர் தேர்விலும் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இதற்கிடையே ராயன் படத்தின் அடுத்த அறிமுகம் யார், எந்த நடிகர் போஸ்டரை தனுஷ் கருப்பு, வெள்ளையில் வெளியிட போகிறார் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.





