- Advertisement -
Homeபொழுதுபோக்குஎல்டர் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறாரா? வெளியான அறிவிப்பால் அப்செட் ஆன தனுஷ்!

எல்டர் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறாரா? வெளியான அறிவிப்பால் அப்செட் ஆன தனுஷ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அடுத்தடுத்த லைன் அப்களால் தொடர்ந்து அவர் பம்பரமாக சுழன்று வேலை செய்து கொண்டு இருக்கிறார். நடிகர் தயாரிப்பாளர் மட்டுமின்றி சமீப காலமாக படங்களை இயக்குவதிலும் தனுஷ் தீவிரம் காட்டுவதால் மும்முரமாக அடுத்தடுத்த பணிகளில் அவர் பிஸியாக இருக்கிறார்.

சமீபத்தில் தயாரிப்பாளர் எல்டர் குமார் தயாரிப்பில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 படம் வெளியானது. கடந்த 2023ம் ஆண்டிலேயே வெளிவர வேண்டிய இந்த படம் பல மாதங்கள் கழித்து கடந்த டிசம்பர் 20ம் தேதி வெளியானது. அதுவும் 2 மணி நேரம் 45 நிமிட படமாக வந்தது. ஓடிடியில் 3 மணி நேரம் 45 நிமிட படமாக வெளியாகும் என்றும் சொல்லப்பட்டது.

- Advertisement -

விடுதலை 2 படத்துக்கு பிறகு வெற்றிமாறன் அடுத்து சூர்யா, அமீர் நடிக்கும் வாடிவாசல் படப்பிடிப்பை துவங்க ஆயத்தமாகி வருகிறார். இந்த படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. விடுதலை 2 படப்பிடிப்பு முடிவதற்காகவே வாடிவாசல் பணிகள் கிடப்பில் போடப்பட்டு இருந்தன.

வாடிவாசல் படம் குறித்து நேற்று முன்தினம் நடிகர் சூர்யா வீட்டில் தயாரிப்பாளர் தாணு, இயக்குனர் வெற்றிமாறன் சந்தித்து பேசியுள்ளனர். தாணு சூர்யா வெற்றிமாறன் இருக்கும் புகைப்படத்தை நேற்று முன்தினம் தயாரிப்பாளர் தாணு தனது எக்ஸ் பக்கத்திலும் வெளியிட்டிருந்தார். அகிலமே ஆராதிக்க வாடிவாசல் திறக்கிறது என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் தயாரிப்பாளர் எல்டர் குமார் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியிருப்பதாக திடீரென அறிவிப்பு வெளியானது. நடிகர் தனுஷ் இப்போது ஏகப்பட்ட கமிட்மென்டுகளில் சிக்கி இருக்கிறார். இட்லி கடை நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற அவரது இயக்கத்தில் படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி வருகின்றன.

அத்துடன் குபேரா படத்தில் நடித்திருக்கிறார். அதுதவிர மதுரை அன்பு தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார். இளையராஜா வாழ்க்கை வரலாறு படமும் 2 பாகங்களாக உருவாகிறது. அதிலும் தனுஷ் நடிக்கிறார். இதுதவிர ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார். இத்தனை கமிட்மென்டுகளுக்கு மத்தியில் இப்படி ஒரு தவறான தகவல் பரவியதால் அவர் அப்செட் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. உண்மையில் அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்