நடிகர் தனுஷ் தற்போது இயக்கத்தில் அதிகம் விருப்பப்பட்டு கவனம் செலுத்தி வருகிறார். இவரது இயக்கத்தில் முதல் திரைப்படமாக பவர் பாண்டி படம் வெளியானது. ராஜ்கிரண் முதன்மை கதாபாத்திரமாக நடித்திருந்த இந்த திரைப்படத்தில் ரேவதி பிரசன்னா சாயா சிங் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.
தனது இளமைக் கால காதலை தேடிச் செல்லும் முதியவரின் பயணத்தை மிக அழகாக காட்சிப்படுத்தியிருந்தார் தனுஷ். சொல்லப்போனால் காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படத்தின் பவர் பாண்டி வேறு ஒரு ரகம் என கூறலாம். மனதை வருடும் காதல் காட்சிகள், வசனங்கள் மற்றும் எதார்த்தமான கிளைமாக்ஸ் என பவர் பாண்டி பவராக இருந்தது.
இப்படி ஒரு அருமையான படத்தை கொடுத்து விட்ட பிறகு, சிறிது காலம் இயக்கத்தில் இருந்து விலகி இருந்தார் தனுஷ். இதன் பின்னர், தனது ஐம்பதாவது திரைப்படத்தை தானே இயக்கி நடிக்க முடிவு செய்த தனுஷ், அதன்படி ராயன் படத்தை எடுத்து முடித்து வெளியிட்டார்.
ஆனால் இந்த திரைப்படம், விமர்சன ரீதியாக அந்த அளவு வரவேற்பு பெறவில்லை. சொல்லப்போனால் அண்ணன் தம்பிக்கு இடையேயான மோதல் என அதர பழசான கதையை எந்த ஒரு சுவாரசியமும் இல்லாமல் கொடுத்திருந்தார் தனுஷ். அதிலும் இரண்டாம் பாதி படத்தின் ஒன்றுமே இல்லை என்று பலரும் சலித்துக் கொண்டனர்.
அது மட்டுமல்லாமல், ஓடிடி யில் இந்த திரைப்படம் வெளியான பிறகு கேலி கிண்டலுக்கு ஆளானது. ஆனால் வசூல் ரீதியாக இந்த திரைப்படம் ஏமாற்றத்தை கொடுக்கவில்லை. கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் பணத்தை குவித்ததால் தனுஷ் உற்சாகமடைந்தார். இந்த நிலையில் அவரது இயக்கத்தில் மூன்றாவதாக உருவாகி இருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது.
தற்போது தனது இயக்கத்தில் நான்காவது படமாக இட்லி கடை என்னும் பெயரில் படத்தை எடுத்து வருகிறார். நித்யா மேனன் ஷாலினி பாண்டே பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தின் சூட்டிங்கை தேனியில் எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் சூட்டியின் போது தனுஷ் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. இணையத்தில் இது வைரலாகி வருவதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.





