- Advertisement -
Homeபொழுதுபோக்குஉருவக்கேலி, வதந்திகள், முதுகில் குத்திய சம்பவங்கள், கெட்டப் பெயர் கடந்து நான் இங்கு வந்து நிற்க...

உருவக்கேலி, வதந்திகள், முதுகில் குத்திய சம்பவங்கள், கெட்டப் பெயர் கடந்து நான் இங்கு வந்து நிற்க காரணம்… – ராயன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் பரபரப்பு பேச்சு

- Advertisement -

நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள அவரது 50வது படம் ராயன். இந்த படம் வருகிற 26ம் தேதி, ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான், படத்தில் நடித்த நடிகர், நடிகையர் உள்பட பலர் கலந்துக்கொண்டனர். இந்த விழாவில் ராயன் பட பாடல்களை தனுஷ், ஏஆர் ரகுமான் இணைந்து பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

கடந்த சில ஆண்டுகளாக நடிகர் தனுஷ் கடுமையான விமர்சனங்களில் சிக்கி வருகிறார். குறிப்பாக 2022ம் ஆண்டில் தனுஷ், அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தங்களது டிவிட்டர் பக்கங்களில், இருவரும் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்து, பரபரப்பை ஏற்படுத்தினர். எனினும் இருவரும் சில மாதங்களில் மீண்டும் இணைந்துவிடுவர் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

- Advertisement -

ஆனால் சில மாதங்களுக்கு முன், இருவரும் சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் தங்களது விவாகரத்து வேண்டும் என்று கேட்டு, மனுதாக்கல் செய்துள்ளனர். வருகிற அக்டோபர் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இருவருக்கும் விவாகரத்து கிடைத்துவிடும் என்று கூறப்படுகிறது.

இத்தகைய சூழலிலும் தொடர்ந்து தனுஷ் படங்களில் நடிப்பது, படங்களை இயக்குவது என பிஸியாக இருந்து வருகிறார். ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ். குபேரா என்ற படத்திலும், அடுத்து இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்திலும் நடிக்க உள்ளார். 2 பாகங்களாக இந்த படம் உருவாக உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் நேற்று சென்னையில், ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இந்த விழாவில் பேசிய நடிகர் தனுஷ், துள்ளுவதோ இளமை படத்தில் நடித்த போது, நான் பயங்கரமாக கேலிக்கு ஆளானேன். முதல் படத்துடன் நான் ஓடியே போய்விடுவேன் என்று நினைத்தேன். ஆனால் 50வது படத்தில் நடித்துவிட்டு ரசிகர்களின் முன் நிற்பது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.

நான் யாருன்னு எனக்குத் தெரியும், என் அப்பா அம்மாவுக்கு தெரியும், என் பசங்களுக்கு தெரியும், என் ரசிகர்களுக்கு தெரியும். ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக பாடி ஷேமிங்குக்கு ஆளாவன் நான். தேவையில்லாத வதந்திகள், கெட்டப் பெயர், முதுகில் குத்துவம் சம்பவம் என நிறைய விஷயங்கள் நடந்தாலும், இன்னமும் நான் இப்படி வந்து உங்கள் முன் நிற்பதற்கு காரணமே ரசிகர்களாகிய நீங்கள்தான் காரணம், நான் போயஸ் கார்டனில் வீடு வாங்க கூடாதா, அதை பெரிய குற்றம் போல பேசுகின்றனர், என்றும் பேசியிருக்கிறார் நடிகர் தனுஷ். ராயன் பட விழாவில் அவரது பேச்சு, இப்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்