- Advertisement -
Homeபொழுதுபோக்குமாரி செல்வராஜ் படத்திற்கு பிறகு, இளம் இயக்குனருடன் கை கோர்க்கும் துருவ் விக்ரம்... இசைப்புயலும் இணைவதால்...

மாரி செல்வராஜ் படத்திற்கு பிறகு, இளம் இயக்குனருடன் கை கோர்க்கும் துருவ் விக்ரம்… இசைப்புயலும் இணைவதால் எகிறும் எதிர்பார்ப்பு…

- Advertisement -

கோலிவுட்டில் ரசிகர்களால் சியான் என செல்லமாக அழைக்கப்படுபவர் விக்ரம். பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து, பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார். கோலார் தங்க வயலில் நடந்த உண்மை கதையை கருவாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகிறது. இதன் ப்ரீ ப்ரொடக்சன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தங்கலான் டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு ஆதித்ய வர்மா திரைப்படம் மூலம் விக்ரமின் மகன் துருவ், வெள்ளி திரைக்கு அறிமுகமானார். தெலுங்கில் மெகா ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டி ரீமேக்காக உருவான இந்த திரைப்படம் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

முன்னதாக இந்த படத்தை பாலா இயக்கினார் சேது திரைப்படத்தின் மூலம் விக்ரமை உலகறிய செய்த பாலா, அவரது மகனுக்கும் பெரிய இடத்தை கொடுப்பார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், படத்தை பார்த்து அதிருப்தி அடைந்த தயாரிப்பு நிறுவனம், முதலில் இருந்து வர்மா எடுக்கப்படும் என்றும், பாலாவிற்கு பதில் வேறு ஒரு இயக்குனர் எடுப்பார் என்றும் அறிவித்தது. இதனால் இரண்டு முறை வர்மா படத்தில் நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் துருவ் விக்ரம்.

இதைத்தொடர்ந்து தனது தந்தையுடன் மகான் திரைப்படத்தில் நடித்தார் துருவ் விக்ரம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான இந்த திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இதனால் மிகப்பெரிய வெற்றிக்கு போராடிக்கொண்டிருந்த துருவ்வுக்கு கை கொடுக்க உதவினார் மாரி செல்வராஜ்.

- Advertisement -

கபடி விளையாட்டை மையாக கொண்ட இந்த திரைப்படம், தூத்துக்குடியை களமாக கொண்டு எடுக்கப்படுகிறது. இதற்காக கபடி பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் துருவ் விக்ரம். இந்த படம் அறிவிக்கப்பட்ட பிறகே, மாமன்னன் படத்தில் மாரி செல்வராஜ் கமிட்டானார். இருப்பினும், வேறு எந்த படத்திற்கும் தாவாத துருவ், தொடர்ந்து கபடியில் முனைப்பு காட்டி வருகிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

மாரி செல்வராஜுடனான படத்திற்கு பிறகு, டாடா பட இயக்குனர் கணேஷ் பாபு படத்தில் துருவ் விக்ரம் நடிக்க இருக்கிறார். இதற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. மாரி செல்வராஜ் படத்திற்கு பிறகு, இதன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த சூப்பர் ஹிட் இயக்குநர்களுடன் துருவ் கைகோர்த்துள்ளதால் இரு படங்களும் வெற்றி பெறும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்