- Advertisement -
Homeபொழுதுபோக்குநீங்கள்தான் என் நாயகன், உச்சி குளிர்ந்து போய் நடிகை சமந்தா இப்படி சொன்ன அந்த பிரபல...

நீங்கள்தான் என் நாயகன், உச்சி குளிர்ந்து போய் நடிகை சமந்தா இப்படி சொன்ன அந்த பிரபல நடிகர் – அழகான நடிகைகளுக்கு இவரை ரொம்ப பிடிக்குதே?

- Advertisement -

நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த தெலுங்கு படம் குஷி. விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த இந்த படத்தை அடுத்து, வேறு படங்களில் இப்போதைக்கு சமந்தா நடிக்கவில்லை. ஏற்கனவே ஒப்புக்கொண்ட சென்னை ஸ்டோரிஸ் என்ற ஆங்கில படத்தில் மட்டுமே சமந்தா நடிக்கிறார்.

மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா, உடல் நலத்தில் பாதிக்கப்பட்டு இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் அதற்கான சிகிச்சைகளை கடந்த ஓராண்டுக்கு மேலாக எடுத்து வருகிறார். அவ்வப்போது தனது ஜிம் உடற்பயிற்சி காட்சிகளை வீடியோவாக பதிவிட்டு, ரசிகர்களுக்கு தன்னம்பிக்கை தருவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்.

- Advertisement -

தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை இயக்கிய இயக்குநர் ஜியோ பேபி டைரக்ட் செய்த படம் காதல் தி கோர். இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி ஜார்ஜ் என்ற கேரக்டரிலும் மற்றும் ஜோதிகா ஓமணா என்ற கேரக்டரிலும் கணவன், மனைவியாக நடித்துள்ளனர். இந்த படத்தை மம்முட்டி படத்தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட மம்முட்டி மனுதாக்கல் செய்த நிலையில், ஜோதிகா அவரை விவகாரத்து செய்ய முடிவெடுக்கிறார். இதுதான் படத்தின் கதைக்கருவாக இருக்கிறது. இதில் ஒரு வித்யாசமான, எந்த பெரிய ஹீரோவும் நடிக்கிற யோசிக்கிற கேரக்டரில் இந்த படத்தில் நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்த படம் குறித்து நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் சமந்தா கூறியிருப்பதாவது, இந்த ஆண்டின் சிறந்த படமாக தி காதல் கோர் படமாக தான் இருக்கிறது. இந்த அழகான, அதே நேரத்தில் மிக வலுவான இந்த படத்தை நீங்கள் பார்க்க வேண்டும். இந்த படத்தை பார்த்து, உங்களுக்கு நன்மை செய்துக்கொள்ளுங்கள்.

மம்முட்டி சார், நீங்கள் தான் என் நாயகன். இந்த படத்தில் உங்கள் நடிப்பை பார்த்துவிட்டு என்னால் அதில் இருந்து வெளியே வர முடியவில்லை. லவ் யூ ஜோதிகா. ஜியோ பேபி லெஜண்டரி என, காதல் தி கோர் படம் குறித்து சமந்தா தன் சந்தோஷத்தை, படம் குறித்த விமர்சனத்தை இதில் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்