தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை தந்தவர் இயக்குனர் கௌதம் மேனன். குறிப்பாக காக்க காக்க விண்ணை தாண்டி வருவாயா வேட்டையாடு விளையாடு வெந்து தணிந்தது காடு வாரணம் ஆயிரம் மின்னலே என்னை அறிந்தால் பச்சைக்கிளி முத்துச்சரம் போன்ற படங்கள் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி பெரிய வெற்றி படங்களாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.
இதில் கௌதம் மேனன் இயக்கிய நீதானே என் பொன் வசந்தம் அச்சம் என்பது மடமையடா எனை நோக்கி பாயும் அம்பு போன்ற சில படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை வெற்றியை ரசிகர்களிடம் பெறாமல் பலத்த தோல்வியை சந்தித்தன. படங்களை இயக்குவது மட்டுமின்றி படங்களை தயாரிப்பதிலும் இயக்குனர் கௌதம் மேனன் அதிக ஆர்வம் காட்டினார்.
அப்படி சில படங்களை அவர் தயாரித்த போது பலத்த நஷ்டங்களை சந்தித்தார். சில படங்கள் தந்த அபாரமான தோல்வியால் அவர் கடன்களில் சிக்கி தடுமாற்றமடைந்தார். அதனால் நடிகர் விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கி தயாரித்த துருவ நட்சத்திரம் என்ற படம் பல ஆண்டுகளாக ரிலீஸ் செய்யப்படாமல் முடங்கிப் போயுள்ளது.
அதனால் படங்களை இயக்குவதிலும், தயாரிப்பதிலும் விடுபட்ட கௌதம் மேனன் படங்களில் நடிக்கவும் ஆரம்பித்தார். ஓ மை கடவுளே லியோ விடுதலை விடுதலை 2 ரத்னம் மைக்கேல் ஹிட் லிஸ்ட் சீதாராமம் கருமேகங்கள் கலைகின்றன உள்ளிட்ட பல படங்களில் நடித்த கௌதம் மேனன், இப்போது மீண்டும் படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் அவர் இயக்கத்தில் உருவான விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படம் விரைவில் திரைக்கு வர இருக்கின்றன. சுந்தர் சி இயக்கத்தில் 12 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட விஷால் சந்தானம் நடித்த மதகஜ ராஜா படம், கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தை போல துருவ நட்சத்திரம் படமும் பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் ரஜினியிடம் கதை சொல்லி, பிறகு சூர்யாவிடம் பேசிய நிலையில் அவர்கள் மறுத்ததால்தான் கடைசியில் துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம் நடித்திருந்தார். இந்த படம் கடன் பிரச்னைகளால் திரைக்கு வராத நிலையில், சினிமா வினியோகஸ்தர்களில் முக்கியமான ஒருவரான திருப்பூர் சுப்ரமணியம் இந்த படத்தை பார்த்து விட்டு, படத்தை பாராட்டிய நிலையில் வருகிற மே 1ம் தேதி இந்த படம் ரிலீஸாக தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நாளில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ரெட்ரோ படமும் ரிலீஸாகிறது.





