தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்படும் ஒரு இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் ஹரீஷ் கல்யாண். பொறியாளன் என்ற படத்தில் நடித்த அவர், விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றனர். இதன்மூலம் பார்வையாளர்கள் மத்தியில் ஹரீஷ் கல்யாணுக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. ஆனால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக வெற்றி பெறவில்லை.
தொடர்ந்து பியார் பிரேமம் காதல் அரிது அரிது சட்டப்படி குற்றம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் எல்ஜிஎம் தாராள பிரபு ஓ மணப்பெண்ணே உள்ளிட்ட பல படங்களில் ஹரீஷ் கல்யாண் நடித்தார். ஆனால் பெரிய அளவில் இந்த படங்கள் வெற்றி பெறவில்லை. ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை அவரால் பெற முடியவில்லை.
இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் பார்க்கிங் என்ற படத்தில் ஹரீஷ் கல்யாண் ஹீரோவாக நடித்தார். நாயகியாக இந்துஜா நடித்திருந்தார். எம்எஸ் பாஸ்கர் இந்த படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். காம்பவுண்ட் வீட்டுக்குள் பார்க்கிங் பகுதியில் காரை யார் நிறுத்துவது என்ற ஈகோ பிரச்னையை மையப்படுத்திய இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.
இந்த படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிகர் ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடித்த படம் லப்பர் பந்து. இதில் நாயகியின் அப்பா கேரக்டரில் முதலில் அட்டக்கத்தி தினேஷ் என்றும் இந்த படத்துக்கு பிறகு கெத்து தினேஷ் என அழைக்கப்படும் தினேஷ் நடித்திருந்தார். கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய இந்த படமும் மாபெரும் வெற்றியை பெற்றது.
பார்க்கிங் லப்பர் பந்து படங்களை தொடர்ந்து அடுத்து டீசல் என்ற படத்தில் நடிகர் ஹரீஷ் கல்யாண் இப்போது நடித்திருக்கிறார். இந்த படத்தில் அதுல்யா ரவி யோகி பாபு வினய் சாய்குமார் அனன்யா கருணாஸ் விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் இடம்பெற்ற பீர் சாங் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், சிம்புவின் குரலில் வெளியான தில்லுபாரு ஆஜா என்ற 2வது பாடலும் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் டிரண்டிங் ஆகியுள்ளது.
வளரும் நிலையில் உள்ள நடிகர்கள் எப்போதுமே தங்களுக்கு கிடைக்கும் வெற்றிகளை அடுத்தடுத்து உறுதிப்படுத்தி முக்கிய இடத்தை பெற்று விடுவதுதான் வழக்கம். அப்படிதான் நடிகர்கள் சிவகார்த்திகேயன் சூரி சந்தானம் போன்றவர்கள் முன்னிலை பெற்றனர். அந்த வரிசையில் இப்போது நடிகர் ஹரீஷ் கல்யாண் பார்க்கிங் லப்பர் பந்து படங்களை தொடர்ந்து டீசல் படத்திலும் பெரிய வெற்றியை பெற்று ஹாட்ரிக் அடிப்பாரா என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.





