மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மோகன்லால். பல வெற்றிப் படங்களை ரசிகர்களுக்கு தந்தவர். சமீபத்தில் வெளியான அவரது துடரும் படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றிருக்கிறது. தமிழில் கமல்ஹாசனுடன் உன்னைப் போல் ஒருவன் விஜயுடன் ஜில்லா போன்ற படங்களில் மோகன்லால் நடித்திருக்கிறார்.
நேற்று முன்தினம் மே 21ம் தேதி நடிகர் மோகன்லால் தனது 65வது பிறந்தநாளை கொண்டாடினர். தொடர்ந்து சினிமாவில் பல வெற்றிகளையும் மகத்தான படங்களில் நடித்து அசுரத்தனமான வசூலையும் குவித்து வரும் நடிகர் மோகன்லாலுக்கு அவரது ரசிகர்களும், மலையாள திரையுலகம் சார்ந்தவர்களும் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நடிகர் மோகன்லால் வெளியிட்ட ஒரு வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, என் பிறந்தநாளில் எனக்கு ஏற்பட்டுள்ள சந்தோசத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பானு பிரகாஷ் எழுதிய என் வாழ்க்கை பற்றிய கதை முகரகம் என்ற டைட்டிலில் புத்தகமாக வெளியாகிறது. என் மதிப்பிற்குரிய எழுத்தாளர் எம் டி வாசுதேவன் நாயர் முன்னுரை எழுதியுள்ளார்.
இந்த புத்தகம் என் 47 ஆண்டு திரையுலக வாழ்க்கையின் பல அம்சங்களை உள்ளடக்கியது. என் வாழ்க்கை சம்பவங்களை வார்த்தைகளாக மாற்றி எழுதி மொழி பெயர்க்க பானு பிரகாஷ் மேற்கொண்ட முயற்சி பெரியது. வரும் டிசம்பர் 25ம் தேதி முகரகம் புத்தகம் வெளியாகிறது என்று அந்த வீடியோவில் நடிகர் மோகன்லால் ஒரு அறிப்பாக கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வாழ்க்கை கதையை அவரே எழுத இருப்பதாக ஒரு தகவல் ஏற்கனவே இருந்து வருகிறது. தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நடிகர் ரஜினிகாந்த் சொல்ல சொல்ல எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் எழுதி அந்த புத்தகம் வெளியாகும் என்று தகவல் ஏற்கனவே இருந்து வருகிறது.
ஆனால் நடிகர் ரஜினிகாந்த் அந்த புத்தகத்தை எழுதுகிறாரா இல்லையா என்பது இன்னும் முடிவாகவில்லை. இப்போது தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் தனது 50வது ஆண்டு அதாவது பொன்விழா ஆண்டில் இருந்து வருகிறார். அந்த சிறப்பை முன்னிட்டு விரைவில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வாழ்க்கை வரலாறு கதை குறித்த பயோபிக் புத்தகம் குறித்த அறிவிப்பை வெளியிடுவாரா என்று தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.





