- Advertisement -
Homeபொழுதுபோக்குவேள்பாரி படத்தில் தெலுங்கு ஹீரோ நடிக்காதது ஏன்? - அந்த தயாரிப்பாளரின் கோபம்தான் காரணம் -...

வேள்பாரி படத்தில் தெலுங்கு ஹீரோ நடிக்காதது ஏன்? – அந்த தயாரிப்பாளரின் கோபம்தான் காரணம் – கேம் சேஞ்சர் படத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்த பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தனது அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார். மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற நாவலை அவர் திரைப்படமாக டைரக்ட் செய்கிறார். இந்த படம் 3 பாகங்களாக வெளியாகும் என்று கூறப்படுகிறது. இது பாகுபலி போன்ற ஒரு பிரமாண்ட படைப்பாக உருவாக உள்ளது.

வரலாற்று கதை பின்னணியில் உருவாகும் இந்த படத்தின் பட்ஜெட் 1000 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. இந்த படத்தை மும்பையை சேர்ந்த மிகப்பெரிய நிதி நிறுவனமான பென் மீடியா என்ற தயாரிப்பு நிறுவனம்தான் தயாரிக்க உள்ளது. இதற்கான பேச்சு வார்த்தை நடந்து முடிந்துள்ளது.

- Advertisement -

இந்த படத்தில் ஹீரோக்களாக தமிழ் நடிகர் சியான் விக்ரம் இந்தி நடிகர் ரன்வீர் சிங் ஆகியோர் நடிக்க கமிட் செய்யப்பட உள்ளனர். ஏற்கனவே அந்நியன் படத்தை இந்தியில் ரீ மேக் செய்ய இயக்குனர் ஷங்கர் முயற்சித்தார். அப்போது சியான் விக்ரம் கேரக்டரில் அந்நியன் இந்தி ரீ மேக்கில் ரன்வீர் சிங் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த படம் டிராப் ஆனதால் அவர் நடிக்கவில்லை.

இப்போது வேள்பாரி படம் மூலம் இயக்குனர் ஷங்கரின் ஆசை நிறைவேறி இருக்கிறது. அதே நேரத்தில் முதலில் வேள்பாரி படத்தில் தமிழ் நடிகர் ஒருவரும் தெலுங்கு நடிகர் ஒருவரும் நடிப்பதாக தான் இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளார். ஆனால் தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜூ கோபம் காரணமாக அந்த முடிவை ஷங்கர் மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.

- Advertisement -

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி மகன் நடிகர் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர் படத்தை இயக்குனர் ஷங்கர் டைரக்ட் செய்தார். இந்த படத்தை தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளரான தில்ராஜூ தயாரித்தார். கேம் சேஞ்சர் படம் படுதோல்வி அடைந்தது. இதனால் தில்ராஜூவுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் அந்த நஷ்டத்தை காட்டிலும் இயக்குனர் ஷங்கர் செய்த ஒரு செயல்தான் தில்ராஜூவை பயங்கர கோபத்துக்கு ஆளாக்கி விட்டது.

கேம் சேஞ்சர் படத்தில் ஒரு பாடல் காட்சி எடுக்கப்பட்டது. இந்த பாடலுக்காக மட்டுமே ரூ. 18 கோடி செலவிடப்பட்டது. ஆனால் படத்தின் நீளம் காரணமாக அந்த பாடல் காட்சியை படத்தில் இருந்து இயக்குனர் ஷங்கர் நீக்கி விட்டார். 18 கோடி ரூபாய் செலவில் சிறை போன்ற 3 சின்ன பட்ஜெட் படங்களே எடுத்து விடலாம். அவ்வளவு பெரிய தொகையில் ஒரு பாடல் காட்சியை மட்டுமே எடுத்த ஷங்கர் அதையும் படத்தில் இடம்பெறாமல் நீக்கி விட்டதால் தெலுங்கு நடிகர் யார் ஷங்கர் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தாலும் அவர்களை நடிக்க விடாமல் தடுப்பதில் அதிக முனைப்பாக தயாரிப்பாளர் தில்ராஜூ இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்