- Advertisement -
Homeபொழுதுபோக்குஹீரோவாக நடிக்க நடிகர் விஷால் கேட்ட சம்பளம், உஷாராக ரூல்ஸ் போட்ட தயாரிப்பு நிறுவனம் -...

ஹீரோவாக நடிக்க நடிகர் விஷால் கேட்ட சம்பளம், உஷாராக ரூல்ஸ் போட்ட தயாரிப்பு நிறுவனம் – அந்த விஷயத்துல குறியா இருக்கிறாரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷால். ஆரம்பத்தில் அவர் நடித்த சண்டக்கோழி, திமிரு, செல்லமே, தாமிரபரணி, துப்பறிவாளன்,மலைக்கோட்டை போன்ற படங்கள் பெரிய வெற்றிப் படங்களாக இருந்தன. ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு விஷால் நடி்தத படங்கள் எதுவும் சரியாக போகவில்லை.

கடைசியாக அவரது நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி படம் பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் அதற்கு முக்கிய காரணம் படத்தில் நடிப்பு அரக்கனாக வில்லன் கேரக்டரில் அசத்திய இயக்குனர் மற்றும் நடிகர் எஸ்ஜே சூர்யா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதன்பிறகு ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த ரத்னம் படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியன் 2, லால் சலாம், அயலான், கங்குவா பட வரிசையில் ரத்னம் படமும் முக்கியமான ஒன்றாக போய்விட்டது. அதனால் விஷால் படமே ஒன்றும் வராத நிலையில், அவர் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி நடிக்க ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படம் பெரிய வெற்றியை பெற்ற நிலையில், மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, துப்பறிவாளன் 2 படத்தை விஷால் இயக்கி நடிக்க உள்ளார். ஆனால் தயாரிப்பு செலவுகளை அவரே ஏற்க வேண்டிய சூழலில் இருப்பதாக தெரிகிறது. அந்த படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் தயாரிக்க சமீபத்தில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அப்போது நடிகர் விஷால் தனக்கு சம்பளமாக ரூ. 20 கோடி கேட்டுள்ளார். அதற்கு சம்மதித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம், கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது அட்வான்ஸாக ரூ 5 கோடி, ஷூட்டிங்கின் போது ரூ 5 கோடி, டப்பிங் பேசும்போது ரூ 5 கோடி, இறுதியாக படம் ரிலீஸ் ஆகும்போது ரூ. 5 கோடி என தருவதாக உறுதியளித்துள்ளது.

ஆனால் நடிகர் விஷால், எனக்கு முக்கியமான ஒரு கமிட்மென்ட் இருப்பதால் முதலில் ரூ. 10 கோடி கொடுங்கள், பிறகு 2 தவணைகளாக ரூ. 10 கோடியை பிரித்து கொடுங்கள் என்று கூறியிருக்கிறார். அதாவது துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு செலவுக்கு பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டு, ரூ. 10 கோடியை விஷால் முதலில் தருமாறு கேட்டிருக்கிறார். இதனால் உஷாரான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம், இன்னும் அந்த தொகையை தராமல் இழுத்தடித்து வருகிறது.

- Advertisement -

சற்று முன்