- Advertisement -
Homeபொழுதுபோக்குஷங்கர் இயக்கத்தில் பிளாப் ஆன கேம் சேஞ்சர் படம்… அந்த விஷயத்தில் ரொம்பவும் தப்பு பண்ணிட்டேன்...

ஷங்கர் இயக்கத்தில் பிளாப் ஆன கேம் சேஞ்சர் படம்… அந்த விஷயத்தில் ரொம்பவும் தப்பு பண்ணிட்டேன் என்று புலம்பிய தயாரிப்பாளர் தில் ராஜூ!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை தந்தவர் இயக்குனர் ஷங்கர். 30 ஆண்டுகளில் அவரது இயக்கத்தில் வெளியான படங்கள் 15 தான். இதில் 13 படங்கள் மாஸ் ஹிட் படங்களாக இருந்திருக்கின்றன. குறிப்பாக ஜெண்டில்மேன் காதலன் எந்திரன் சிவாஜி ஜீன்ஸ் முதல்வன் அந்நியன் இந்தியன் போன்ற படங்கள் எவர்கிரீன் மூவியாக இருக்கின்றன.

இந்த மாஸ் ஹிட் படங்கள் பிரமாண்ட இயக்குனர் என ரசிகர்கள் இயக்குனர் ஷங்கரை கொண்டாட செய்திருக்கின்றன. ஆனால் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 கேம் சேஞ்சர் ஆகிய 2 படங்களும் படு தோல்வியை சந்தித்தன. எதிர்பார்த்த அளவுக்கு இந்த படங்கள் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை.

- Advertisement -

சமீபத்தில் பேசிய கேம் சேஞ்சர் படத்தின் எடிட்டர் ஷமீர் முகமது கூறுகையில், இந்த படம் 7 மணி நேரம் எடுத்து வைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் கேம் சேஞ்சர் படத்தை 3 மணி நேரமாக இயக்குனர் ஷங்கர் குறைக்க சொன்னார். என்னால் முடியாது என்று கூறி பாதியில் விலகி விட்டேன். ஷங்கருடன் பணி செய்வது திருப்தியானது இல்லை என்று அவர் கூறியிருந்ததும் பெரிய சர்ச்சையை கிளப்பியது.

இதில் கேம் சேஞ்சர் படத்தை தயாரித்தவர் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான தில் ராஜூ. விஜய் நடித்த வாரிசு படத்தையும் தில்ராஜூதான் தயாரித்திருந்தார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் தில்ராஜூ, கேம் சேஞ்சர் படத்தின் தோல்வி குறித்து தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து தயாரிப்பாளர் தில் ராஜூ கூறியதாவது, ஷங்கர் போன்ற ஒரு பெரிய இயக்குனருடன் முன்பு நான் பணியாற்றவில்லை. கேம் சேஞ்சர் படம்தான் நான் வைத்த தவறான படி. இந்த படம் உறுதியான போதே நான் காண்ட்ராக்ட்டில் சில விஷயங்களை தெளிவாக குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
அதை செய்யாமல் விட்டதுதான் நான் செய்த பெரிய தவறு.

ஒரு கட்டத்துக்கு மேல் பல விஷயங்கள் என் கையை விட்டு போய்விட்டது. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. இப்படி அடிபட்டு தான் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. இனி வருங்காலத்தில் உஷாராக இருப்பேன் என்று தயாரிப்பாளர் தில் ராஜூ கூறியிருக்கிறார். இந்த விமர்சனங்களுக்கு பதிலடி தரும் விதமாக இந்தியன் 3 படத்தை ஷங்கர் தரவேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்