தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் தளபதி விஜய். இவர் தன்னுடைய மகனான சஞ்சய்யை சிறுவயதில் இருந்தே அவ்வப்போது திரை வெளிச்சத்தில் காண்பித்து வந்தார். இந்த நிலையில் சஞ்சய் தற்போது வளர்ந்து பெரிய ஆளாக ஆகிவிட்டார். சமீபத்தில் அவர் இயக்கிய குறும்படம் ஒன்று வெளியாகி நல்ல ஒரு வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

சஞ்சய்யை பொறுத்தவரை நல்ல ஒரு இயக்குனர் ஆகவேண்டும் என்பதே அவருடைய ஆசையாக இருக்கிறது என்று அவருடைய தாத்தாவான எஸ்ஏசி சில பேட்டிகளில் கூறி உள்ளார். அதே சமயம் சஞ்சய் தனது முதல் படத்தை விஜய்யை வைத்து இயக்க விரும்பவில்லை என்றும், மாறாக விஜய் சேதுபதிதான் அவரின் முதல் ஹீரோவாக இருக்க வேண்டும் என்று அவர் ஆசை படுவதாகவும் எஸ்ஏசி கூறி இருந்தார்.
இந்த நிலையில், சினிமா வட்டாரங்கள் சஞ்சயை விட்டபாடில்லை. அவருக்கு இப்போதே படவாய்ப்புகள் வர ஆரமித்துவிட்டன. இது குறித்து விஜய் கூட கூறி இருந்தார். அதை உறுதி படுத்தும் வகையில் சமீபத்தி ஒரு இயக்குனர் வெளிப்படையாகவே சஞ்சய்க்கு அழைப்பு விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

நடிகை தேவயானியின் கணவரான ராஜகுமாரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் “நீ வருவாய் என” படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க விரும்புவதாகவும், அதுகுறித்த வேளைகளில் தான் ஈடுபட்டு வருவதாகவும் கூறி உள்ளார்.
நீ வருவாய் என முதல் பாகத்தை எடுக்கும் போது அதில் விஜய், அஜித் என இருவரும் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று தான் எதிர்பார்த்து இருவரிடமும் கதையை கூறியதாகவும். ஆனால் அந்த சமயத்தில் விஜய்யால் சில காரணங்களால் அதில் நடிக்க முடியாமல் போனது என்றும் அவர் கூறி உள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், நீ வருவாய் என பாகம் இரண்டில் சஞ்சய் ஹீரோவாகவும், தேவயானியின் மகள் ஹீரோயினாகவும் நடக்க வேண்டும் என்பது தனது ஆசை என்றும், அதில் தேவையானியும் இடம் பெறுவார் என்றும் அவர் கூறி உள்ளார்.





