- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென நடிகராக அவதாரம் எடுத்த பாகுபலி டைரக்டர் ராஜமவுலி, அவர் நடிக்கிற படம்… இதுவா? -...

திடீரென நடிகராக அவதாரம் எடுத்த பாகுபலி டைரக்டர் ராஜமவுலி, அவர் நடிக்கிற படம்… இதுவா? – பெரிய சம்பவமா செஞ்சுட்டாரே?

- Advertisement -

இயக்குநர் ராஜமவுலி, இந்திய சினிமா கொண்டாடும் ஒரு இயக்குநராக இருக்கிறார். ஒரு படத்தை டைரக்ட் செய்ய அவர் பெறுகிற சம்பளம் ரூ. 100 கோடி என்பது தகவல். டாப் ஸ்டார் நடிகர்களை அடுத்து, இயக்குநர்களில் 100 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிற இயக்குநர் ராஜமவுலிதான். தமிழ் சினிமா பிரமாண்ட இயக்குநர் இந்தியன் 2, இந்தியன் 3 படங்களுக்கு மொத்தமாக சேர்த்து வாங்கிய சம்பளம் ரூ. 58 கோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் இரண்டு பாகங்களாக படங்களை தரமுடியும் என்ற புதிய வழித்தடத்தை ஏற்படுத்திக்கொடுத்தவர் இயக்குநர் ராஜமவுலி, அவர் பாகுபலி படத்தை முதல் பாகம், இரண்டாம் பாகம் என கொடுத்த பிறகுதான் அடுத்து கேஜிஎப் 2 பாகங்களாக வந்தது, பொன்னியின் செல்வன் 2 பாகங்களாக வந்தது.

- Advertisement -

இப்போது பல படங்கள் இரண்டு பாகங்களாக வரும் ஒரு தைரியத்தை சினிமாத்துறைக்கு ஏற்படுத்தி தந்தவரே ராஜமவுலிதான். பாகுபலி, ஆர்ஆர்ஆர், நான் ஈ போன்ற படங்களை தந்து ரசிகர்களை அசத்தியவர். அதிலும் மகாபாரத கதையை மையமாக வைத்து உருவாக்கிய பாகுபலி படம், பெரிய அளவில் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடித்த ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து பாடல், ஆஸ்கர் விருது பெற்று இந்திய சினிமாவுக்கே பெருமை சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே பலரும் ராஜமவுலி நடிக்க அழைப்பு விடுத்த நிலையில், செல்போன் விளம்பரத்தில் ரூ. 30 கோடி சம்பளமாக பெற்று நடித்தார் ராஜமவுலி.

- Advertisement -

இப்போது கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பதானி என முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கும் கல்கி என்ற புதிய படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் நடிக்க கமல், 20 நாட்கள் கால்ஷீட்டுக்கு ரூ. 150 கோடி சம்பளம் பெற்றுள்ளார். இதில் முதல் பாகத்துக்காக 6 நாட்கள் ஷெட்யூலை நடித்துக்கொடுத்த கமல், அடுத்த படத்தில் 16 நாட்களுக்கான 2வது ஷெட்யூலை நடித்துக் கொடுக்க உள்ளார்.

இந்த படத்தில் கமல் வில்லன் ரோலில் நடிப்பதாகவும் முதல் மற்றும் 2ம் பாகம் இரண்டிலுமே கமல் இடம்பெறும் வகையில் படக்குழு திட்டமிட்டுள்ளது. மிக பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிக்க ராஜமவுலி கமிட் ஆகியிருக்கிறார். நாக் அஸ்வின் இயக்கும் இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகிறது. சயன்டிபிக் பிக்சனில் உருவாகும் இந்த படத்தில் ராஜமவுலியும் நடிப்பது பெரிய பரபரப்பை, ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்