தமிழ் சினிமாவில் உள்ள மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக ரசிகர்களால் கவனிக்கப்படுபவர் டைரக்டர் அமீர். இவர் இதுவரை பத்துக்கும் குறைவான படங்களையே இயக்கியிருந்தாலும் அவர் இயக்கிய ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களை மிக ஆழமாக கவர்ந்தவர், அழுத்தமான கதைக்களத்தில் மிக அற்புதமான கதை சொல்வதில் அமீர் மிகச் சிறந்த இயக்குனராக இருந்து வருகிறார்.
அந்த வகையில் சூர்யா நடித்த மௌனம் பேசியதே, கார்த்தி நடித்த பருத்திவீரன், ஜீவா நடித்த ராம் உள்ளிட்ட படங்களில் அமீரின் படைப்புத்திறனை வெளிப்படுத்திய அற்புதமான படங்களாக இருந்தன. அடுத்து அமீர் இயக்கத்தில் அவர் நடித்த மாயவலை என்ற படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் கமல்ஹாசனின் மிக தீவிரமான ரசிகர் டைரக்டர் அமீர் என்பது பலரும் அறிந்த விஷயம்தான். குறிப்பாக 1996ல் பருத்திவீரன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு நாள் கொடைக்கானலில் பருத்திவீரன் படப்பிடிப்பில் இருந்த போது, இயக்குனர் அமீர் மதுரை செல்வதாகவும் உதவி இயக்குனர்களை சூட்டிங்கை கவனித்துக்கொள்ளுமாறும் சொல்லிவிட்டு மதுரைக்கு புறப்பட்டு சென்றுவிட்டார்.
ஏதோ மிக முக்கியமான வேலையாக போய் இருப்பார் என்று படக்குழுவினர் நினைத்திருந்த நிலையில், மாலையில் கொடைக்கானலுக்கு திரும்பி வந்த அவரிடம் விசாரித்த போது, இன்று ரிலீஸ் ஆன விருமாண்டி படம் பார்க்க மதுரைக்குச் சென்று இருந்தேன் என்று அவர் கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஷூட்டிங் கூட கவனிக்காமல் கூட கமல் நடித்த விருமாண்டி படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்கும் அளவுக்கு இயக்குனர் அமீர், நடிகர் கமல்ஹாசனின் மிக தீவிரமான ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று இந்தியன் 2 படம் வெளியானது. இந்த படம் குறித்து பொதுவாகவே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றமும் அதிருப்தியும் நிலவுகிறது. படம் பார்த்த ரசிகர்கள் பலரும் இது கமல்ஹாசன் நடித்த படம் போலவே இல்லை. இயக்குனர் ஷங்கர் இயக்கிய படம் போலவும் இல்லை, இந்தியன் 2 படம் வராமலே இருந்து இருக்கலாம் என்றுதான் கூறிக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் இயக்குனர் அமீர் இந்தியன் 2 படம் பார்த்த நிலையில், அவர் கூறியிருப்பதாவது, லாஜிக்கே இல்லாத கதை, கதையே இல்லாத பிரமாண்டம், கமல் என்னும் பிறவிக் கலைஞனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார். இந்தியன் 2 படம் மிக மோசமாக இருக்கிறது. ஆனால் கமலின் நடிப்பு நன்றாக இருக்கிறது என்று பாராட்டுகிறாரா அல்லது இப்படி ஒரு லாஜிக் இல்லாத கதையில், கதையே இல்லாத பிரமாண்ட படத்தில் கமல்ஹாசன் நடித்ததை கலாய்த்து கிண்டலாக வாழ்த்துகள் சொல்லி இருக்கிறாரா என்பது, ரசிகர்கள் மத்தியில் பெரிய கேள்வியை எழுப்பி உள்ளது.





