- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்கூட வேலை பார்த்த உதவி இயக்குனர்கள் பலரை யாரென்றே எனக்கு தெரியாது, பெயர் கூட தெரியாது...

என்கூட வேலை பார்த்த உதவி இயக்குனர்கள் பலரை யாரென்றே எனக்கு தெரியாது, பெயர் கூட தெரியாது – இயக்குனர் அமீர் சொன்ன ஆச்சரிய தகவல்!

- Advertisement -

தயாரிப்பாளர் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில் உருவான படம் யோலோ. இந்த படத்தை சாம் டைரக்ட் செய்திருக்கிறார். புதுமுக நாயகன் தேவ் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் இயக்குனர்கள் ஆர்கே செல்வமணி அமீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

யோலோ பட விழாவில் இயக்குனர் அமீர் பேசியதாவது, புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் என்ற பெயர் நிரந்தரமாக அமைய காரணமாக இருந்தவர் இயக்குனர் ஆர்கே செல்வமணிதான். கேப்டன் மறைவுக்கு பிறகு இப்போதும் அவர் நடித்த கேப்டன் பிரபாகரன் படம் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் கேப்டன் பிரபாகரன் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றியடைகிறது என்றால் அதற்கு காரணம் அந்த படத்தின் தரம் தான்.

- Advertisement -

என்னுடைய முதல் படம் மௌனம் பேசியது முதல் இப்போது வரைக்கும் நிறைய உதவி இயக்குனர்கள் என்கிட்ட இருந்து வெளியே போயிருக்கிறார்கள். அதில் பாதி பேரின் பெயர் கூட எனக்குத் தெரியாது. சார் உங்களோடு நான் ஒர்க் பண்ணினேன் என்று சொன்னால், அப்படியா சரி ஓகே என்றுதான் நான் சொல்வேன்.

ஏனென்றால் ஒரே ஒரு ஷெட்யூலில் மட்டும்தான் ஒர்க் பண்ணி இருப்பான். அடுத்த ஷெட்யூல்களில் இருக்க மாட்டான். அப்படிப்பட்டவர்கள் ஒரு 30, 40 பேர் இருக்கிறார்கள். ஆனால் அதில் வெற்றி பெற்றவர்கள் மிகக் குறைவுதான். அதில் யோலோ படத்தின் இயக்குனர் சாம் ஒருவர். எல்லோரும் சமுத்திரக்கனி பற்றி இங்கே சொன்னார்கள். சமுத்திரக்கனி இளகிய மனசுக்காரர். பருத்திவீரன் படப்பிடிப்பில் யாரையும் திட்டக்கூட மாட்டார். இப்போது அவரை நடிகனாக பார்ப்பது பிரமிப்பாக இருக்கிறது. அவருடைய வளர்ச்சிக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

- Advertisement -

வாழ்க்கை நாம் நினைப்பது போல் நடக்காது. அப்படி நினைத்த மாதிரி நடந்துச்சுன்னா அது வாழ்க்கையே இல்லை என்று பொதுவாக சொல்வார்கள். நீ போகும் பாதையில் இடையூறு இல்லை என்றால் அது உனக்கான பாதை இல்லை. நீ போகும் பாதையில் இடையூறு இருந்தால் அதை சரி பண்ணினால் தான் அது உன் பாதையாக இருக்கும்.

யோலோ படத்தின் இயக்குனர் சாம் என்னிடமும் ஒர்க் பண்ணியிருக்கிறார். சமுத்திரக்கனியிடமும் ஒர்க் பண்ணியிருக்கிறார். ஆனால் எங்கள் இருவரது பாணியை பின்பற்றாமல் புதுசாக ஒரு படம் எடுத்திருக்கிறார். படத்தில் ஒவ்வொன்றையும் கவனமாக செய்திருக்கிறார். அது டிரெய்லரில் தெரிகிறது. இந்த படம் வெற்றியடைய அனைவருக்கும் வாழ்த்துகள் என்று இயக்குனர் அமீர் அந்த விழாவில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்