இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்துக்கு பிறகு, அடுத்து ரஜினி 171 படத்தை இயக்குவதற்காக தன்னை தயார்படுத்திக்கொண்டு வருகிறார். இப்போது ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். பெசன்ட் நகரில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரூ. 2.75 லட்சம் ரூபாய் மாத வாடகையில் அதற்காக பிரத்யேக ரூம் போட்டு தந்துள்ளது. அங்குதான் லோகேஷ் ஸ்கிரிப் எழுதி வருகிறார்.
வேட்டையன் படம் வரும் பிப்ரவரி இறுதிக்குள் முடிவடைந்துவிடும். அதன்பின் மார்ச் மாதம் இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாதம் துவக்கத்திலோ ரஜினி 171 படப்பிடிப்பு துவங்கும். சிவகார்த்திகேயன், மாஸ்டர் ராகவா லாரன்ஸ், ஜீவன், பாலிவுட் நடிகர் ரன்பீர் சிங் உள்ளிட்டோர் நடிப்பது உறுதியான நிலையில் மற்ற நடிகர், நடிகையர் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
லோகேஷ் கனகராஜை பொருத்த வரை டிரக் ப்ரீ சொசைட்டி என்ற கோணத்தில், போதை இல்லாத சமுதாயம் என்ற தலைப்பை மையக்கருவாக கொண்டு படம் எடுப்பதாக கூறுகிறார். ஆனால் அவரது படங்களை பார்க்கும்போது போதைப்பொருள் பற்றி தெரியாதவர்கள் கூட தெரிந்துக்கொள்ளவும் அதை பயன்படுத்தவும்தான் தூண்டும். அந்த வகையில்தான் அந்த படங்கள் தூண்டுதலாக இருக்கின்றன.
ஹாலிவுட் படங்களை எனக்கு பிடிக்கும். அதனால் ஆக்ஷன் படங்களாக தருகிறேன் என்று லோகேஷ் கனகராஜ் கூறுகிறார். அப்படி ஆக்ஷன் படங்களை, ஹாலிவுட் படங்களை தமிழ் ரசிகர்கள் பார்க்க விரும்பினால் தமிழகத்தில் அத்தகைய ஆங்கில படங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகின்றன. நேரடியாக தியேட்டர்களுக்கு சென்று அதை ரசிகர்கள் பார்த்துவிடும் வாய்ப்பு உள்ளது. ஆங்கில படத்தை காப்பியடித்து இவர் எடுக்கும் படங்களை பார்க்க அவசியமே யாருக்கும் இல்லை.
மேலும், இவருக்கு ஆங்கில படம், ஆக்சன் படம் பிடிக்கும் என்றால் இவர் மட்டுமே அதை பார்த்து ரசிக்கட்டும். தமிழ் ரசிகர்கள் ஏன் அதை பார்க்க வேண்டும். இவர் கோடிக்கணக்கில் சம்பாதிக்க தமிழ் ரசிகர்கள் மீது, ஆக்சன், வன்முறை படங்களை திணிக்கிறார். இவரது ஜி ஸ்குவாடு தயாரிப்பு,நிறுவனம் முதன் முறையாக தயாரித்த பைட் கிளப் படமும், போதைப் பொருள் கருவை மையப்படுத்தியதாக இருப்பது இன்னும் ரசிகர்களை கடுப்பை கிளப்பியுள்ளது.
இப்படி ஏகப்பட்ட விமர்சனங்களில் சிக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மன உளைச்சலில் சிக்கி இப்போது சமூகவலைதள பக்கத்தில் இருந்து மொத்தமாக விலகி இருக்கிறார். லியோ சக்சஸ் மீட்டில் கழுகு கதை பேசி விமர்சனத்தில் சிக்கிய இவரது நண்பர் ரத்னக்குமார் ஏற்கனவே, வலைதள பக்கத்தில் இருந்து விலகி விட்டார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் முகநூலை ஹேக் செய்து, ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறுதியில் லோேகஷூக்கு முகநூல் கணக்கே இல்லை என்பதும் தெரிய வந்தது. இப்படி பல சிக்கல்களால் இனி சமூக வலைதள பக்கமே வரக்கூடாது என அதிரடி முடிவெடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ் .





