- Advertisement -
Homeபொழுதுபோக்குசுவிங்கம் மென்ற பீனிக்ஸ் படத்தின் ஹீரோ சூர்யா - அப்படி செய்யாதீங்க… எங்க வாழ்க்கையோடு விளையாடாதீங்க...

சுவிங்கம் மென்ற பீனிக்ஸ் படத்தின் ஹீரோ சூர்யா – அப்படி செய்யாதீங்க… எங்க வாழ்க்கையோடு விளையாடாதீங்க – இயக்குனர் அனல் அரசு ஆவேசம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. பல வெற்றிப்படங்களை ரசிகர்களுக்கு தந்தவர். குறிப்பாக அவரது 50வது படம் மகாராஜா, கடந்தாண்டில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இன்னும் சில ஆண்டுகளில் மகாராஜா 2 படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஏஸ் படம் படுதோல்வியை சந்தித்தது.

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி. இவர் விஜய் சேதுபதியுடன் சிந்துபாத் என்ற படத்தில் சிறுவனாக நடித்திருந்தார். இப்போது பீனிக்ஸ் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகி இருக்கிறார். இந்த படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு டைரக்ட் செய்திருக்கிறார். பீனிக்ஸ் படம் மூலம் ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு, தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகி இருக்கிறார்.

- Advertisement -

2 வாரங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த பீனிக்ஸ் படம் பிரமோ விழாவில் பங்கேற்ற படத்தின் நாயகன் சூர்யா, வாயில் சுவிங்கம் மென்றபடி ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அவர்களுடன் புகைப்படங்களுடன் எடுத்துக்கொண்டார். அது இணையத்தில் கடும் விமர்சனத்திற்குள்ளானது. முதல் படத்திலேயே இவ்வளவு பந்தா செய்கிறாரே? என்று இணையத்தில் விமர்சனம் எழுந்தது.

கடந்த வாரத்தில் பீனிக்ஸ் படம் வெளியாகி ஒரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மற்ற ஒரு தரப்பினர் இது ஒரு சுமாரான படம்தான், சண்டை காட்சிகள் மட்டுமே நன்றாக உள்ளது. விஜய் சேதுபதி மகன் சூர்யாவுக்கு நடிக்கவே தெரியவில்லை என்றும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பீனிக்ஸ் படத்தின் வெற்றி விழாவை படக்குழுவினர் சமீபத்தில் கொண்டாடினர்.

- Advertisement -

அந்த விழாவில் பங்கேற்ற படத்தின் இயக்குனர் அனல் அரசு பேசியதாவது, பீனிக்ஸ் படம் சூர்யாவுக்காக மட்டுமே எடுக்கப்பட்ட படம் கிடையாது. சூர்யா மீது குற்றச்சாட்டு கூறுபவர்களுக்கும் அவரை விமர்சித்து ட்ரோல் செய்பவர்களுக்கும் நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால், நீங்கள் சூர்யாவின் வாழ்க்கையில் மட்டும் விளையாடவில்லை. இந்த படத்தின் மூலமாக புதிதாக சினிமாவில் எட்டிப் பார்த்துள்ள அனைவரது வாழ்க்கையிலும் விளையாடுகிறீர்கள்.

ஒரு படத்தில் பலரது வாழ்க்கை அடங்கி இருக்கிறது என்பதை உணர்ந்து யோசித்து செயல்பட்டால் நல்லது என்றார். அடுத்து படத்தின் நாயகன் சூர்யாவை நோக்கி பேசிய அவர், தவறு என்று தெரிந்தால் உடனடியாக மன்னிப்பு கேட்டு விடுங்கள். விமர்சிப்பவரையும் உறவுகளாக பாருங்கள். மன்னிப்பு பல பிரச்னைகளை தீர்த்து விடும் என்று இயக்குனர் அனல் அரசு அந்த விழாவில் பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்