- Advertisement -
Homeபொழுதுபோக்குபாலிவுட் நடிகர் சல்மான்கான் நடித்த சிக்கந்தர் படம் தோல்விக்கு காரணம், மனம் திறந்து பேசிய படத்தின்...

பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடித்த சிக்கந்தர் படம் தோல்விக்கு காரணம், மனம் திறந்து பேசிய படத்தின் இயக்குனர் ஏஆர் முருகதாஸ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஏஆர் முருகதாஸ். நடிகர் அஜீத்குமார் நடித்த தீனா படம்தான் அவர் இயக்கிய முதல் படம். தொடர்ந்து கஜினி ரமணா கத்தி துப்பாக்கி சர்கார் போன்ற ஹிட் படங்களை ஏஆர் முருகதாஸ் கொடுத்திருக்கிறார். இந்தியில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அமீர்கான் நடித்த கஜினி படமும் வெற்றி பெற்றது.

தமிழில் விஜயகாந்த் விஜய் அஜீத்குமார் சூர்யா நடிப்பில் வெற்றிப் படங்களை கொடுத்த ஏஆர் முருகதாஸ், ரஜினிகாந்தை வைத்த இயக்கிய தர்பார் படம் தோல்வியடைந்தது. அதே போல் இந்தியில் அவரது இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் கடைசியாக வெளியான சிக்கந்தர் படமும் பெரிய தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

இயக்குனர் ஏஆர் முருகதாஸை பொருத்த வரை கதை திரைக்கதையில் அதிக ஆளுமை செய்கிறவர். அவரது படங்களில் சமூக தாக்கமும் இருக்கும். அதே நேரத்தில் பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்திருக்கும். கமர்ஷியல் படங்களிலும் அவர் ரசிகர்களை மகிழ்விக்கும் கதைக்களத்தில் உருவாக்கி இருப்பார். அதனால் அவரது படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்த சூழலில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி என்ற படத்தை ஏஆர் முருகதாஸ் டைரக்ட் செய்திருக்கிறார். கஜினி படத்தையும் துப்பாக்கி படத்தையும் கலந்து மதராஸி படத்தின் கதைக்களத்தை ஏஆர் முருகதாஸ் உருவாக்கி இருக்கிறார். வருகிற செப்டம்பர் 5ம் தேதி மதராஸி படம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் ருக்மணி வசந்த், வித்யுத் ஜம்வால் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

- Advertisement -

மதராஸி படம் இன்னும் 18 தினங்களில் திரைக்கு வர உள்ள நிலையில் அந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற அவர் மதராஸி படம் குறித்த பல முக்கிய தகவல்களை பகிர்ந்துக்கொண்டார். அப்போது சல்மான்கான் நடித்த சிக்கந்தர் படத்தின் தோல்வி குறித்தும் வெளிப்படையாக பேசினார்.

அந்த நேர்காணலில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் கூறியதாவது, சிக்கந்தர் படத்தின் கதை என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. ஆனால் நான் நினைத்த கதையை என்னால் திரையில் கொண்டு வர முடியவில்லை. அதற்கு நான் மட்டும் பொறுப்பாக முடியாது. அதற்கு படக்குழுவும் ஒரு காரணம். ஆதிக்கம் செலுத்தும் வகையில் என்னிடம் ஒரு யூனிட் மற்றும் குழு இருந்தால் அதை சாத்தியப்படுத்தி இருக்கலாம். அதனால் இது என்னுடைய தோல்வி அல்ல என்று இயக்குனர் ஏஆர் முருகதாஸ் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்