- Advertisement -
Homeபொழுதுபோக்குமற்ற மொழி படங்கள் போல தமிழ் படங்கள் ரூ. 1000 கோடி வசூலிக்க வாய்ப்பே இல்லை,...

மற்ற மொழி படங்கள் போல தமிழ் படங்கள் ரூ. 1000 கோடி வசூலிக்க வாய்ப்பே இல்லை, காரணத்தை வெளிப்படையாக கூறிய இயக்குனர் ஏஆர் முருகதாஸ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றவர் இயக்குனர் ஏஆர் முருகதாஸ். நடிகர் அஜீத்குமார் நடித்த தீனா என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான ஏஆர் முருகதாஸ் தொடர்ந்து கஜினி ரமணா கத்தி துப்பாக்கி சர்கார் 7ம் அறிவு உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்தார்.

ஆனால் கடைசியாக ஏஆர் முருகதாஸ், தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நயன்தாரா நடித்த தர்பார் என்ற படத்தை இயக்கினார். அந்த படம் படுதோல்வி அடைந்தது. தொடர்ந்து இந்தியில் நடிகர் சல்மான்கான் நடித்த சிக்கந்தர் என்ற படத்தை ஏஆர் முருகதாஸ் டைரக்ட் செய்தார். அந்தப் படமும் படுதோல்வியை சந்தித்தது. இதனால் அவரது ரசிகர்கள் பலத்த ஏமாற்றமடைந்தனர்.

- Advertisement -

இப்படி தொடர்ந்து அவர் இயக்கிய இரண்டு படங்களும் தொடர் தோல்வியை சந்தித்த நிலையில் இப்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி என்ற படத்தை ஏஆர் முருகதாஸ் டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் பிரமோஷன் பணிகளில் ஏ ஆர் முருகதாஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குனர் ஏஆர் முருகதாஸிடம், இந்தி தெலுங்கு கன்னட மொழி படங்கள் தொடர்ந்து 1000 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதிக்கின்றன. ஆனால் தமிழ் படங்கள் மட்டும் இன்னும் 1000 கோடி ரூபாய் என்று சாதனையை எட்ட முடியாமல் பின்தங்கியே இருப்பதற்கு என்ன காரணம் என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

- Advertisement -

இதுகுறித்து இயக்குனர் ஏஆர் முருகதாஸ் கூறியதாவது, மற்ற மொழி படங்கள் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்கின்றன. அதற்கு காரணம் என்ன என்றால் அந்த மொழி இயக்குனர்கள் பொழுதுபோக்குக்காக மட்டுமே படம் எடுக்கிறார்கள். ஆனால் தமிழ் இயக்குனர்கள் படத்தின் மூலம் மக்களுக்கு கல்வி கற்பிக்கிறார்கள்.

அதனால் தான் மற்ற மொழி படங்கள் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்கின்றன. தமிழ் சினிமா அவ்வளவு பெரிய வசூலை எட்டாமல் போக மற்ற மொழி படங்களுக்கும், தமிழ் மொழி படத்துக்கும் உள்ள இந்த வித்யாசம் தான் காரணம் என்று கூறியிருக்கிறார். இது தற்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்றுள்ளது. சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ரஜினிகாந்த் நடித்த கூலி படம் 1000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த படம் எதிர்மறை விமர்சனங்களால் இப்போது 1000 கோடி ரூபாய் வசூல் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்