- Advertisement -
Homeபொழுதுபோக்குகஜினி 7ம் அறிவு படங்களுக்கு பின் நடிகர் சூர்யாவுடன் இணையாதது ஏன்? - நீண்ட நாள்...

கஜினி 7ம் அறிவு படங்களுக்கு பின் நடிகர் சூர்யாவுடன் இணையாதது ஏன்? – நீண்ட நாள் கேள்விக்கு ஓபனாக பதில் சொன்ன இயக்குனர் ஏஆர் முருகதாஸ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகர் சூர்யா. அதேபோல் பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்தவர் இயக்குனர் ஏஆர் முருகதாஸ். நடிகர் சூர்யாவுக்கு அவரது தமிழ் சினிமா பயணத்தில் இரண்டு முக்கியமான வெற்றிப் படங்களை தந்தவர் ஏஆர் முருகதாஸ் என்றால் அது மிகையல்ல.

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான கஜினி மற்றும் ஏழாம் அறிவு ஆகிய இரண்டு படங்களுமே சூர்யாவுக்கு மாஸ் ஹிட் படங்களாக அமைந்திருந்தன. இந்த இரண்டு படங்கள் மாஸ் ஹிட் படங்களாக இருந்தும் மீண்டும் நடிகர் சூர்யாவும் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இணைந்து பணியாற்றவில்லை.

- Advertisement -

காக்க காக்க படத்துக்கு பின் சூர்யா நடித்த கஜினி படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது. இதில் பிரதான நாயகியாக அசினும் 2வது நாயகியாக நயன்தாராவும் நடித்திருந்தனர். அதே போல் ஏழாம் அறிவு படத்தில் போதி தர்மர் கேரக்டரில் சூர்யா நடிப்ப பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்த 2 படங்களுமே சூர்யாவுக்கு ரசிகர்களிடம் பெரிய இமேஜை ஏற்படுத்திக் கொடுத்தன.

வெற்றிப் படங்களை தந்தம் சூர்யா, ஏஆர் முருகதாஸ் மீண்டும் ஏன் இணையவில்லை என்ற கேள்வி பல ஆண்டுகளாக ரசிகர்களிடம் இருந்து வருகிறது. ஏஆர் முருகதாஸூக்கும் சூர்யாவுக்கும் இடையே ஏதோ பிரச்சனை ஏற்பட்டு விட்டது. அதனால்தான் அவர்கள் மீண்டும் இணைந்து படம் செய்யவில்லை என்று வதந்தி பரவியது.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குனர் ஏஆர் முருகதாஸிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து இயக்குனர் ஏஆர் முருகதாஸ் கூறியதாவது, சூர்யா ஒரு திறமையான நடிகர். கடுமையான உழைப்பாளி. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏழாம் அறிவு படத்துக்கு பிறகு என் ரூட்டும் சூர்யாவின் ரூட்டும் வேறு விதமாக போய்விட்டது.

துப்பாக்கி கதை ரெடி செய்தபிறகு நான் வேறு பாதையில் பயணிக்க தொடங்கி விட்டேன். அதேபோல் சூர்யாவும் வேறு பாதையில் சென்றுவிட்டார். அதனால் தான் இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்றவில்லை. இதில் வேறு எந்த விதமான விருப்பு வெறுப்புகளும் தனிப்பட்ட முறையில் இல்லை. சரியான கதையும் சூழலும் உருவாகாத காரணமாகவே நாங்கள் இருவரும் மீண்டும் இணையவில்லை என்று ஏஆர் முருகதாஸ் தெளிவாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்