இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி வெளியான படம் தி கோட். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். 385 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் விஜய் சம்பளம் மட்டுமே 200 கோடி என்று சொல்லப்பட்டது.
தி கோட் படத்தை பொருத்தவரை தயாரிப்பு நிறுவனத்திற்கு அதிக லாபம் தந்த ஒரு வெற்றி படமாகதான் இருந்தது. ஏனெனில் படம் வெளியான 25 நாட்களில், உலகம் முழுவதும் 460 கோடி ரூபாய் கடந்தது. மேலும் நெட்பிளிக்ஸ் படத்தை 120 கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் உரிமம் பெற்றுள்ளது. இதுதவிர 90 கோடி ரூபாய்க்கு சேட்டிலைட் உரிமம் பெறப்பட்டுள்ளது. அதனால் தி கோட் பெரிய லாபம் கொடுத்த ஒரு படமாகதான் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு அமைந்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன், தி கோட் படத்தின் இறுதிக்காட்சியில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். படத்தில் வில்லனாக மேனன் கேரக்டரில் நடித்த மைக் மோகனை, காந்தி கேரக்டரில் வரும் நடிகர் விஜய், சிவகார்த்திகேயனிடம் கவனித்துக் கொள்ளும்படி கூறிச் செல்வார். அப்போது துப்பாக்கியை அவரது கையில் கொடுத்து, இவர் தப்பிக்க முயற்சி செய்தால் மிரட்டுங்க என்று கூறிவிட்டுச் செல்வார்.
அந்த காட்சியில் விஜயுடன் நடித்த சிவகார்த்திகேயனுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும், பலத்த கைதட்டலும் கிடைத்தது. விஜய் அரசியலுக்கு செல்வதால், தமிழ் சினிமாவில் விஜய் இடத்துக்கு அடுத்து வரப்போவது நடிகர் சிவகார்த்திகேயன்தான் என்ற ஒரு தகவலும் வேகமாக பரவி விடுகிறது.
ஆனால் சமீபத்தில் திருச்சியில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன், ஒரு சூப்பர் ஸ்டார், ஒரு உலகநாயகன், ஒரு தல போல தளபதி என்றால் நடிகர் விஜய் மட்டும் தான். அவர் போல நல்ல படங்களில் நடித்து வெற்றி படங்களை தரலாம் என்று நினைப்பதுதான் சரியாக இருக்கும், என்று பேசி இருந்தார். எனினும் விஜய் இடத்தில் சிவகார்த்திகேயனை ரசிகர்கள் வரவேற்க தயாராக இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தி கோட் படத்தை தயாரிக்க ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அப்போது தி கோட் படம் கிளைமேக்ஸ் சூட்டிங்கில் சிவகார்த்திகேயனும் விஜயும் நடித்த அந்த காட்சியில், நடிகர் சிவகார்த்திகேயனை சந்திக்கும் நடிகர் விஜய், அவரை கட்டித் தழுவி தன் அன்பை, நட்பை வெளிப்படுத்துகிறார். பிறகு சிவகார்த்திகேயனின் கையில் காஸ்ட்லியான வாட்ச் ஒன்றை கட்டி விடுகிறார். அருகில் உள்ள இயக்குனர் வெங்கட்பிரபு மற்றும் படக்குழுவினர் அப்போது கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர். அந்த வீடியோ இப்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும்;https://x.com/Ags_production/status/1842542735481556998





