- Advertisement -
Homeபொழுதுபோக்குமதராஸி படத்தில் முதலில் நடிக்க இருந்தது அந்த நடிகர்தான், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் சொன்ன தகவல்...

மதராஸி படத்தில் முதலில் நடிக்க இருந்தது அந்த நடிகர்தான், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் சொன்ன தகவல் – வியந்து போன ரசிகர்கள்!

- Advertisement -

சில படங்கள் சில ஹீரோக்களுக்கு மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்து அவர்களுக்கு பெரிய இமேஜை ஏற்படுத்தி தருகின்றன. அதே நேரத்தில் சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் அந்த நேரத்தில் வேறு படங்களில் கமிட் ஆகியிருந்தால் கால்ஷீட் பிரச்னையால் அவர்கள் அந்த படத்தில் நடிக்க முடியாமல் மிஸ் ஆகிவிடலாம்.

சில ஹீரோக்களுக்கு அந்த கதை பிடிக்காமலும் கூட அந்த படங்களில் நடிக்காமல் போகலாம். அப்படி கால்ஷீட் பிரச்னையாலும், கதை பிடிக்காமலும் சில ஹீரோக்கள் மறுத்த படங்கள், பிறகு மற்ற நடிகரின் நடிப்பில் உருவாகி வெளியாகி மாஸ் ஹிட் படங்களாக அமைந்திருக்கின்றன.

- Advertisement -

இப்படி பல வெற்றிப் படங்களை நடிகர்கள் ஸ்ரீகாந்த் அப்பாஸ் அஜீத்குமார் விஜய் மாதவன் சூர்யா போன்றவர்கள் இழந்திருக்கின்றனர். நேருக்கு நேர் படத்தில் சூர்யா நடித்த கேரக்டரில் முதலில் நடித்தது அஜீத்குமார்தான். அதே போல் கஜினி படத்தில் சூர்யாவுக்கு பதிலாக முதலில் நடித்தது அஜீத்குமார்தான்.

அதே போல் உன்னை நினைத்து படத்தில் முதலில் நடித்தது விஜய்தான். பிறகு விஜய் விலகியதால் அதில் சூர்யா நடித்தார். இப்படி பல படங்களில் ஹீரோக்கள் மாறியிருக்கின்றனர். அந்த வகையில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வருகிற செப்டம்பர் 5ம் தேதி மதராஸி என்ற படம் வெளியாக உளளது.

- Advertisement -

மதராஸி படம் குறித்த ஒரு முக்கிய தகவலை சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் ஏஆர் முருகதாஸ் கூறியிருக்கிறார். அவர் கூறியதாவது, மதராஸி படத்தின் கதையை ஏழு, எட்டு ஆண்டுகளுக்கு முன்பே நடிகர் ஷாருக்கானிடம் சொன்னேன். அவரும் கதை ரொம்ப நல்லா இருக்கு ஓகே என்று சொன்னார்.

இதுகுறித்து இரண்டு வாரங்கள் கழித்து அவருக்கு நான் மெசேஜ் செய்தேன். ஆனால் அவரது பதில் கொஞ்சம் தாமதமாக இருந்தது. அதனால் அதற்குப் பிறகு நான் தொடர்பு கொள்ளவில்லை. இப்போது அந்த கதையில்தான் நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருக்கிறார் என்று இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்