- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது இத்தனை திரைப்படங்களை தயாரிக்கிறாரா அட்லி... இயக்குனர் காட்டில் அடை மழைதான் போங்க...

என்னது இத்தனை திரைப்படங்களை தயாரிக்கிறாரா அட்லி… இயக்குனர் காட்டில் அடை மழைதான் போங்க…

- Advertisement -

இந்திய சினிமாவிலேயே சக்சஸ்ஃபுல் கமர்சியல் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் அட்லி. கோலிவுட்டில் ராஜா ராணி திரைப்படத்தில் தொடங்கிய அவரது பயணம், இன்று பாலிவுட் உலகில் ஜவான் வரை விரிந்து கிடக்கிறது. தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று திரைப்படங்களை இயக்கி வெற்றி கொடுத்தார் அட்லி.

ஆனால் ஆரம்பத்தில் இருந்து அட்லி, பல்வேறு திரைப்படங்களை காப்பியடிப்பதாக அவர் மீது குற்றச்சாட்டு இருந்து கொண்டே வருகிறது. ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாத அவர், ரசிகர்களுக்கு ஏற்றார் போல் கமர்சியல் படத்தைக் கொடுத்து அதை வெற்றிக்கான செய்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் ஹிந்தியில் அவர் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்தது. தமிழ் சினிமாவில் இருந்து சென்ற ஒரு இயக்குனர், பாலிவுட்டில் இவ்வளவு பெரிய சாதனைகள் நிகழ்த்தியது பலரையும் பாராட்டச் செய்தது. இது ஒரு புறம் இருக்க, தனது மீதான குற்றச்சாட்டிற்கு சமீபத்தில் விளக்கம் அளித்தார் அட்லி.

அதில் தான் எந்த ஒரு திரைப்படங்களையும் காப்பியடிப்பது இல்லை என்று கூறியிருந்தார். தொடர்ந்து பேசிய அவர், நண்பன் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த போது, படப்பிடிப்பின் கடைசி நாளில் விஜய் என்னை அழைத்து பேசினார் என்றும், கதை இருந்தால் கூறுங்கள் நடிக்க வருகிறேன் என்று தெரிவித்ததாகவும் கூறினார். அது மட்டுமல்லாமல் அஜித்திற்கு பயங்கரமான ஒரு கதையை தயாரித்து வைத்திருப்பதாகவும் அட்லி பேசியிருந்தார்.

- Advertisement -

இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பிலும் அட்லி கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தின் மூலம் அவர் தயாரிப்பாளராக அறிமுகமானார். ஹாரர் திரைப்படமாக உருவான இது, ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற தவறியது. இதைத்தொடர்ந்து அவர் தயாரித்த அந்த காரம் திரைப்படமும் தோல்வியடைந்தது. இந்நிலையில் தற்போது அவர் பாலிவுட் பக்கம் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

அங்கு தெறி படம் ரீமேக் ஆகிறது. இதில் வரும் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இதுபோக தமிழில் மேலும் இரண்டு திரைப்படங்களை அட்லி தயாரிக்க உள்ளாராம். ஆப்பிள் ஸ்டுடியோஸ் என்னும் பெயரில் தனது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கும் அவர், தெலுங்கிலும் ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார். இது போக வரும் நாட்களில் ஏராளமான திரைப்படங்களை தயாரிக்க அட்லி யோசனை செய்து வருகிறாராம்.

- Advertisement -

சற்று முன்