- Advertisement -
Homeபொழுதுபோக்குசன் பிக்சர்ஸ் முக்கிய நிர்வாகியுடன் நடிகர் விஜயை தனியறையில் சந்தித்த டைரக்டர் அட்லி - நீண்ட...

சன் பிக்சர்ஸ் முக்கிய நிர்வாகியுடன் நடிகர் விஜயை தனியறையில் சந்தித்த டைரக்டர் அட்லி – நீண்ட நேர பேச்சுவார்த்தையில் உருவானதா விஜய் 69?

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்து வருகிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் இந்த படம் ஏறக்குறைய முடிவடையும் தருவாயில் இருக்கிறது. இன்னும் 15 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருப்பதால், அதை ரஷ்யாவில் ஷூட் செய்ய உள்ளனர். படக்குழு ரஷ்யா செல்ல விஷா கிடைத்துவிட்டதால், நாளை படக்குழு ரஷ்யா கிளம்புகிறது.

இந்த படத்துக்கு பிறகு தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சி பணிகளில் முழு தீவிரம் காட்டி பணி செய்ய திட்டமிட்டுள்ள விஜய், ஏப்ரல் மாதத்தில் மதுரையில் கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்த உள்ளார். பல லட்சம் ரசிகர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில்தான் கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், எதிர்கால திட்டங்கள் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறது.

- Advertisement -

இந்த மாநாட்டில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், குறிப்பாக அஜீத்குமார் பங்கேற்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி விஜய்க்கு ஆதரவாக பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த மேடையில் ஏறி தங்களது ஆதரவை தெரிவிக்கும் பல தரமான சம்பவங்கள் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன. மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்குமே கமகம மட்டன் பிரியாணி விருந்து காத்திருக்கிறது.

வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருப்பதால், 2025ம் ஆண்டில், அல்லது 2026ல் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக தனது ஒரு படம் வெளியாகும் விதமாக, தனது கடைசி படத்தில் நடிக்க விஜய் திட்டமிட்டுள்ளார். அதற்காக யார் இயக்குநர் என்பதில் பலத்த போட்டி நிலவி வருகிறது. இதில் தெலுங்கு பட டைரக்டர் திரி விக்ரம், தமிழ்பட இயக்குநர் எச். வினோத் இறுதி செய்யப்பட்டுள்ளனர். சில தினங்களில் யார் என விஜயே அறிவிக்க உள்ளார்.

- Advertisement -

இந்நிலையில், இயக்குநர் அட்லி, சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான கண்ணன் என்பவருடன், நடிகர் விஜயை நேரில் சந்தித்துள்ளார். தனியறையில் ஒரு மணி நேரத்துக்கு மேல் அவர்கள் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அதனால் விஜய் 69 படத்தை அட்லி இயக்கவும், சன் பிக்சர்ஸ் தயாரிக்கவும் பேச்சு நடந்திருக்கலாம் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது.

விஜய் நடிப்பில் தெறி, பிகில், மெர்சல் என 3 ஹிட் படங்களை கொடுத்தவர் அட்லி. ஜவான் படமும் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், அட்லிக்கு விஜய் ஓகே சொல்ல அதிக வாய்ப்புள்ளது. ஆனால் ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜூனா நடிக்கும் படத்தில் அட்லி இயக்குனராக கமிட் ஆகி விட்டார். ஒருவேளை அந்த படம் குறித்து பேசவும், விஜயிடம் நேரில் ஆசிர்வாதம் பெறவும் தம்பியாக, தன் அண்ணனை அட்லி சந்திக்க வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்