- Advertisement -
Homeபொழுதுபோக்குஜவான் படம் உறுதியானதும் ஷாருக்கான் இப்படி ஒரு காரியத்தை செய்தாரா... உண்மையைப் போட்டு உடைத்த இயக்குனர்...

ஜவான் படம் உறுதியானதும் ஷாருக்கான் இப்படி ஒரு காரியத்தை செய்தாரா… உண்மையைப் போட்டு உடைத்த இயக்குனர் அட்லி…

- Advertisement -

கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டிற்கு பாய்ச்சல் நிகழ்த்தி பலரையும் கவனிக்க வைத்தவர் இயக்குனர் அட்லி. ஆரம்பத்தில் குறும்படங்களை இயக்கி வந்த அவர், அங்கிருந்து இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். எந்திரன் மற்றும் நண்பன் ஆகிய திரைப்படங்களில் வேலை செய்த பின்பு, ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் அவருக்கு இயக்குனராகும் வாய்ப்பு கிடைத்தது.

முதல் திரைப்படமே அட்லிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்க, அங்கிருந்து அவரது திரையுலக பயணம் தொடங்கியது. தளபதி விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பை பெற்ற அட்லி, தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்து ஆச்சரியப்படுத்தினார்.

- Advertisement -

மூன்று திரைப்படங்களுமே வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையை படைக்க, அட்லியின் மார்க்கெட் எகிறியது. இப்படியான சூழலில் பிகில் திரைப்படத்திற்கு பிறகு அட்லியின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகமலேயே இருந்தது. அடுத்தது அவர் யாரை வைத்து இயக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக ஷாருக்கான் உடன் இணைந்தார் அட்லீ. இந்த படத்தை அவரது மனைவியே தயாரிக்க ஜவான் திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகியது.

கடந்த செப்டம்பர் மாதம் வெளியான இந்த திரைப்படம் இந்தி தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. பல திரைப்படங்களின் காட்சியை சேர்த்து எடுத்து வைத்திருந்ததால் ஜவான் தமிழில் எடுபடாமல் போக, இந்தியில் வசூல் சாதனை படைத்தது. ஆயிரம் கோடி ரூபாய் வசூல் ஈட்டிய நிலையில், பலராலும் பேசப்பட்டார் அட்லி.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்திருக்கும் பேட்டியில், ஜவான் திரைப்படம் குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, ஜவான் திரைப்படம் உறுதியான பிறகு ஷாருக்கான் சார், உடனடியாக விஜய் அண்ணாவுக்கு செல்போனில் தொடர்பு கொண்டார். நான் அட்லியுடன் இணைந்து ஜவான் படத்தில் நடிக்கிறேன். என்னை அசௌகரியமான இடத்திற்கு அவர் கொண்டு செல்ல மாட்டார் என்பதை உறுதியாக கூறுகிறேன். நாட்டிலேயே அவர் மிகப்பெரிய ஒரு இயக்குனர் என்று பேசினார்.

இதைக் கேட்ட விஜய் அண்ணா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். லியோ திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒவ்வொரு முறையும் லோகேஷ் கனகராஜ் அடுத்த கட்டத்திற்கு செல்வதை நான் பார்க்கிறேன். லோகேஷ் படத்தில் இருக்கும் வில்லன்களின் கட்டமைப்பை நான் மிகவும் ரசிப்பேன். அவர் நட்சத்திர நடிகர்களின் அந்தஸ்தை குறைக்காமல், இங்கு வழக்கமாக இருக்கும் கட்டமைப்பை உடைத்துள்ளார் என்று தெரிவித்தார்.

- Advertisement -

சற்று முன்