- Advertisement -
Homeபொழுதுபோக்குசம்பளமே இல்லாமல் நான் இயக்கிய படம் அது, பணத்தை கொடுத்து என்னை விலைக்கு வாங்க முடியாது...

சம்பளமே இல்லாமல் நான் இயக்கிய படம் அது, பணத்தை கொடுத்து என்னை விலைக்கு வாங்க முடியாது – அதிரடியாக பேசிய இயக்குனர் பாலா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் பாலா, பல வெற்றிப் படங்களை தந்தவர். அவரது இயக்கத்தில் வருகிற 10ம் தேதி வணங்கான் படம் ரிலீஸாகிறது. இதில் அருண் விஜய் நாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சேது படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பாலா, இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக தொழில் கற்றவர். நந்தா பிதாமகன் நான் கடவுள் பரதேசி அவன் இவன் தாரை தப்பட்டை என குறை எண்ணிக்கையில்தான் படங்களை இயக்கி உள்ளார். ஆனால் அவர் சினிமாவுக்குள் வந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.

- Advertisement -

கடைசியாக பாலா இயக்கத்தில் வெளியான படம் தாரை தப்பட்டை. இது 2026ம் ஆண்டில் வெளியானது. இந்த படத்தில் சசிக்குமார் வரலட்சுமி சரத்குமார் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த 1000வது படம் என்ற சிறப்பு இந்த படத்துக்கு உண்டு. தெருக்கூத்து கலைஞர்களை மையப்படுத்தி பாலா இயக்கிய இந்த படம், பெரிய வெற்றியை பெறவில்லை.

இயக்குனர் பாலாவை பொருத்த வரை, அடிக்கடி படம் இயக்கும் எண்ணம் இல்லாதவர். அதனால்தான் 25 ஆண்டுகளாகியும் அவர் இயக்கிய படங்களில் எண்ணிக்கை 10 என்ற இரட்டை இலக்கத்தை கூட அடையவில்லை. அதே நேரத்தில் அவரது படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மனதில் நிலையாக நின்றுவிடும் கதைக்களத்தில் உருவாகின்றன.

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இயக்குனர் பாலா கூறியதாவது, சேது படம் எடுத்ததே அவ்வளவு சிரமத்தில். அந்த படத்தை இயக்கி தயாரித்து, வெளியிட்டதே செய்ததே பெரிய விஷயம். போராட்டமாக இருந்தது. இதில் சம்பளத்தை எப்படி எதிர்பார்க்க முடியும். நான் சம்பளமே இல்லாமல் வேலை பார்த்த படம்தான் சேது.

நந்தா படம் இயக்கிய போது அமெரிக்க வாழ் தமிழர்கள் கொடுத்தது. டாலர்களில் முன்பணம் தந்ததனர். அது எவ்வளவு என்று சரியாக நினைவில் இல்லை. பணம் எனக்கு தேவைதான். ஆனால் பணத்தை கொடுத்து என்னை விலைக்கு வாங்க முடியாது. பணம் என்னை ரொம்பவும் பாடாய் படுத்தியிருக்கிறது. சென்னைக்கு வந்த பிறகு சில நேரங்களில் ஏற்றம் இறக்கம் இருந்திருக்கிறது. இது எல்லோருக்கும் உண்டு, என்று இயக்குனர் பாலா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்