- Advertisement -
Homeபொழுதுபோக்குபையா திரைப்படத்தில் தமன்னாவுக்கு பதில் முதலில் இந்த நடிகைதான் நடிப்பதாக இருந்தது... ஓபன் ஆக பேசிய...

பையா திரைப்படத்தில் தமன்னாவுக்கு பதில் முதலில் இந்த நடிகைதான் நடிப்பதாக இருந்தது… ஓபன் ஆக பேசிய இயக்குனர் லிங்குசாமி…

- Advertisement -

தமிழ் சினிமாவில் கமர்சியல் திரைப்படங்களை கொடுப்பதில் கிங்காக இருந்தவர் லிங்குசாமி. தொடர்ந்து ஆக்சன் கலந்த மசாலா சினிமாக்களையே கொடுத்து வந்த அவருக்கு முதல் திரைப்படமாக அமைந்தது ஆனந்தம். முழுக்க முழுக்க குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

மம்முட்டி முரளி ரம்பா தேவயானி ஸ்ரீவித்யா டெல்லி கணேஷ் என படத்தில் நடித்திருந்த அத்தனை பேரும் தங்களது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியதால் இந்த திரைப்படம் கொண்டாடப்பட்டது. இப்படி முதல் திரைப்படத்தின் மூலமே சினிமா துறைக்கு வெளிச்சத்திற்கு வந்த லிங்குசாமி அடுத்தடுத்த படங்களை பெரும் வாய்ப்பை பெற்றார்.

- Advertisement -

இதில் அவரது இரண்டாவது திரைப்படமாக ரன் அமைந்தது. இங்கிருந்து அவரது கமர்சியல் பயணம் தொடங்க ஆரம்பித்தது. சாதாரண காதல் கதைதான் என்றாலும் அதில் திரைக்கதையில் சுவாரஸ்யம் கூட்டிக் கொடுப்பதில் தான் கெட்டிக்காரன் என்பதை நிரூபித்தார் இயக்குனர்.

இங்கிருந்து லிங்குசாமியின் பயணம் வெற்றி பயணமாகவே அமைந்தது. அவரது திரையுலக வாழ்க்கையிலேயே மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தது சண்டக்கோழி திரைப்படம். விஷாலுக்கும் மிகப்பெரிய பிளாட்பார்ம் ஆக அந்த திரைப்படம் அமைந்தது. இந்தப் படத்தின் கதையை முதலில் விஜய்க்கு தான் எழுதியதாக அடிக்கடி பல மேடைகளில் கூறியிருக்கிறார் லிங்குசாமி.

- Advertisement -

ஆனால் அந்த இயக்குனர் தற்போது மிகப்பெரிய வெற்றியை அடைய முடியாமல் தவித்து வருகிறார். இந்த நிலையில் தான் கடந்து வந்த பாதை குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கும் அவர் பையா படத்தின் சில விஷயங்களையும் பகிர்ந்து உள்ளார். அதில், தமன்னா மிகவும் பொறுப்பு மிக்கவர். பையா திரைப்படத்தில் நடிக்கும் போது அவருக்கு 19 அல்லது 20 வயதுதான் இருக்கும்.

முதலில் இந்த திரைப்படத்தில் நயன்தாராதான் நடிப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் அவருக்கு பதில் தமன்னா படத்திற்குள் வந்தார். இது ரோடு கார் பந்தயம் தொடர்பான கதை என்பதால், எல்லா இடத்திற்கும் எங்களால் கேரவனை கொண்டு செல்ல முடியாது. அந்த மாதிரி சமயங்களில், வெறும் மூன்று புடவைகளுக்கு நடுவே காஸ்ட்யூம் மாற்றிக் கொண்டு வந்துவிடுவார் தமன்னா. அப்போதே அவரது கடமை உணர்ச்சியை பார்த்து நான் பாராட்டியிருக்கிறேன். நிச்சயமாக நீ கரீனா கபூர் போல் வருவாய் என்று கூறி இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்