- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்பவே அப்படி ஒரு விவகாரம் செய்தவரா நடிகர் வடிவேலு? விரட்டியடித்த இயக்குனர் பாரதிராஜா - பிரபல...

அப்பவே அப்படி ஒரு விவகாரம் செய்தவரா நடிகர் வடிவேலு? விரட்டியடித்த இயக்குனர் பாரதிராஜா – பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட முக்கிய தகவல்!

- Advertisement -

தமிழ் சினிமாவின் அடையாளமாக இயக்குனர் பாரதிராஜா இருந்து வருகிறார். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே அலைகள் ஓய்வதில்லை படங்களை பார்த்த பிறகுதான், இனி நான் படங்களில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கே வந்தேன் என, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், அலைகள் ஓய்வதில்லை படத்தின் வெற்றி விழாவில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

ஏனென்றால் தனது இயக்கத்தின் மூலம் தமிழ் சினிமாவை இயக்குனர் பாரதிராஜா அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றுவிட்டார். இனி நான் நடித்தால் எனது ஸ்டைல் படங்கள் ஓடாது. அதனால் இனி பாரதிராஜா போன்ற இயக்குனர்கள் வந்த பிறகு நடிப்பது சரியாக இருக்காது என்று முடிவு செய்ததாக எம்ஜிஆரே சொல்லும் அளவுக்கு சினிமாவை இயக்கியவர் பாரதிராஜா.

- Advertisement -

ஸ்டுடியோக்களில் போடப்பட்ட ஷெட்களிலும் ஊட்டி கொடைக்கானலிலும் ஷூட்டிங் நடத்தப்பட்ட நிலையில் புழுதிக்காடுகளும் செம்மண் பூமிகளும் நிறைந்த கிராமப்புறங்களுக்கு கேமராவை தூக்கிக் கொண்டு சென்றவர் பாரதிராஜா. கிராமப்புற மனிதர்களின் அன்றாட வாழ்வை உணர்வுபூர்வ உறவுகளின் உன்னதங்களை கேமராவில் படம் பிடித்து திரைகளில் வெளிச்சம் போட்டு காட்டியவர்.

அதனால் பாரதிராஜா படங்களில் நடிப்பதே வாழ்க்கையின் லட்சியம் என்று பல நடிகர் நடிகையர் கூறும் அளவுக்கு சிறந்த படைப்புகளை பாரதிராஜா தந்தவர். அந்த வகையில் நெப்போலின் விஜயகுமார் ராதிகா சரத்குமார் விக்னேஷ் வடிவேலு விஜி சந்திரசேகரன் உள்ளிட்டோர் நடித்த படம்தான் கிழக்குச் சீமையிலே.

- Advertisement -

இந்த படத்தில் ஒச்சு என்ற கேரக்டரில் வடிவேலு நடித்த போது அவர் அப்போது வளர்ந்து வரும் ஒரு நடிகராக தான் இருந்தார். பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பும் அடையாளமும் பெறவில்லை. ஆனால் இந்த படத்தில் நடிக்க தனக்கு சம்பளமாக ரூ. 25 ஆயிரம் கேட்டிருக்கிறார். இந்த படத்தை தயாரித்தது கலைப்புலி எஸ் தாணு. இவர் பெரிய தயாரிப்பாளராக இன்றளவும் இருந்து வருகிறார்.

வடிவேலு கேட்ட சம்பளம் குறித்து அறிந்த இயக்குனர் வடிவேலு, அதிக சம்பளம் கேட்கிறானே, என்ற கோபத்தில் வடிவேலுவை நீ இந்த படத்தில் நடிக்க வேண்டாம் போ என்று விரட்டியிருக்கிறார். அப்போது நடிகர் வடிவேலு அழுதிருக்கிறார். இதைப் பார்த்த தயாரிப்பாளர் எஸ் தாணு, அதே சம்பளம் தருகிறேன், என்று கூறிய பின்பே அந்த படத்தில் வடிவேலு நடித்ததாக சமீபத்தில் ஒரு நேர்காணலில் தாணு கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்